Asianet News TamilAsianet News Tamil

மோடி பாவங்க ! அவருக்கு பொருளாதாரம் புரியல … என்னை நிதி அமைச்சராக்குங்க அப்புறம் பாருங்க !! வெளுத்து வாங்கிய சு.சுவாமி !!

பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் தன்னை நிதியமைச்சராக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவமி அதிரடியாக தெரிவித்துள்ளார்,

Modi didinot know economics and i want to become finance minister
Author
Delhi, First Published Jan 11, 2020, 5:32 PM IST

இது தொடர்பாக பேசிய அவர், ரிசர்வ் வங்கி  முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்த பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதங்களை அதிகரித்தார், எனவே நிதி மூலதன செலவு அதிகரித்தது. பல சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்படுவதற்கு ரகுராம் ராஜன் தான் பொறுப்பு என கூறினார்.

நீங்கள் ஜே.என்.யூக்குச் சென்று பட்டம் பெறலாம், எதையும் கற்றுக்கொள்ள முடியாது. பிரதமருக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் என்னை நிதியமைச்சராக்க வேண்டும். 

Modi didinot know economics and i want to become finance minister

ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால், நான் ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமல்ல, நான் ஒரு அரசியல்வாதியும் கூட. நிதியமைச்சர் பதவியில் நான் நன்றாக செயல்பட்டால் அடுத்து பிரதமர் பதவி கேட்பேன் என கட்சியினர் பயப்படுகிறார்கள்.

Modi didinot know economics and i want to become finance minister

பொருளாதாரம் மோசமான காலங்களில் உள்ளது, எல்லாமே கீழ்நோக்கிச் செல்கிறது. வரி பயங்கரவாதம் 'கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த போக்கு தொடர்ந்தால் வங்கிகள் மூடப்படும், வங்கி சாரா நிதிநிறுவனங்கள் மூடப்படும் (அது) பேரழிவிற்கு வழிவகுக்கும்  என சுப்ரமணியன்சுவாமி அதிரடியாக தெரிவித்தார்..

Follow Us:
Download App:
  • android
  • ios