கருணாநிதிக்கு பெரிய அளவில் மரியாதை செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு மோடி உத்தரவிட்டு உள்ளார். கருணாநிதிக்கு அண்ணா நினைவிடத்துக்கு அருகில் தான்  இடம் வேண்டும் என  முதல்வரிடம்  திமுக வினர் கோரிக்கை வைத்த நிலையில், கருணாநிதிக்கு பெரிய அளவில் மரியாதை செய்ய வேண்டும் என  மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று  மதியம் ஸ்டாலின் முதல்வர் உடனான பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கருணாநிதியின் உடல் நிலையில் தொடர் பின்னடைவை அடுத்து அவசர அவசரமாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் எடப்பாடியை சந்தித்தார் ஸ்டாலின்.இந்த சந்திப்பின் போது ஸ்டாலின் உடன் முக அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

20 நிமிடம் நடைப்பெற்ற இந்த சந்திப்பை அடுத்து, அனைவரும் அவசரமாக வெளியேறினர். இதனை தொடந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணிதுறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். முதலில்  மெரினாவில் அனுமதி கேட்ட திமுகவினற்கு முதல்வர்  எடப்பாடி  நோ சொல்லியதாக கூறப்பட்டது. இதன் பின்னர் "எடப்பாடி சம்மதிக்க மறுக்கிறார் என்று....மீண்டும் நிதின் கட்கரியின் உதவியை நாடியுள்ளது திமுக.

தற்போது, அண்ணா நினைவிடத்துக்கு ஓகே சொல்ல பொ.ப.து.வுக்கு எடப்பாடி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பொ.ப.து.அதிகாரிகள் அதற்ககான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரப்படி, சென்னை முழுக்க ஆயுதப்படை போலீசார் ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதிலிருந்தும் தொண்டர்கள் சென்னை நோக்கி படம் எடுக்க தொடங்கி உள்ள நிலையில், சென்னை முழுவதும் பெரும்   பதற்றம் நிலவுகிறது.