சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று கோவளம் வருகை தருகிறார். இதற்காக கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியுள்ளார். இன்று  இரு தலைவர்களின் சந்திப்பு சற்று நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, கடற்கரையில் இருந்த குப்பைகளை கைகளால் அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். 

சுமார் அரைமணி நேரம் பிரதமர் மோடி துப்புரவுப்பணிகளை மேற்கொண்டார். பொது இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாக வைக்கவும், உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உறுதியேற்போம் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலணி அணியாமல் வெறும் கைகளால் பிரதமர் மோடி குப்பைகளை சேகரிக்கும் பணியை மேற்கொண்டார். தான் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் வழங்கியதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.