Asianet News TamilAsianet News Tamil

மருதமலை முருகனுக்கு அரோகரா !! தமிழில் வணங்கி பிரச்சாரம் செய்த மோடி !!

மருதமலை முருகனுக்கு அரோகரா.... வணக்கம் சகோதர சகோதரிகளே தமிழக மக்களுக்கு வணக்கம் என தமிழில் பேசி கோவையில் பிரசாரத்தை  தொடங்கிய பிரதமர் மோடி, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கப்போகும் என்பதை காட்டப் போகும் தேர்தல் தான் இது என தெரிவித்தார்.

modi campaign in covai
Author
Coimbatore, First Published Apr 9, 2019, 9:23 PM IST

மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றிச் சுழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணளை ஆதரித்து பேசினார்.

அப்போது மருதமலை முருகனுக்கு அரோகரா.... வணக்கம் சகோதர சகோதரிகளே தமிழக மக்களுக்கு வணக்கம் என தமிழில் பேசி  அசத்தினார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் எண்ணங்கள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். கல்வி,தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன் என கூறினார்..

பிரதமர் மோடி ஏன் தேசியத்தை பற்றி பேசுகிறார் என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். தேசிய தன்மை தான் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, மருத்துவ காப்பீடு திட்டத்தை கொடுக்க வைத்தது. தேசியவாதியாக இருப்பது குற்றமா?.. இந்த தேசியவாதம் தான் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளது என கூறினார்.

modi campaign in covai

1998-ல் கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது திமுகவும், காங்கிரசும் மோசமாக செயல்பட்டன. எதிரி நாடு மீது எதிர்க்கட்சிகள் மென்மையாக நடந்து கொள்கிறது. பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. தேசியவாதிகளாக இருந்தோம், தேசியவாதிகளாக இருக்கிறோம். தேசியவாதிகளாகவே இருப்போம். எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள் நாட்டை காக்க உதவாது என கூறினார்.. 

துல்லிய தாக்குதல் நடந்ததா? விமானப்படை தாக்குதல் நடத்தியதா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர்.  ராணுவம், விமானப்படை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சந்தேகித்து வருகின்றன.

modi campaign in covai

தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். நம் நாடு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும். தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பு தளவாட மையங்கள் தமிழகத்தில் அமையும் போது வேலை வாய்ப்பு, முதலீடு அதிகரிக்கும். பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமாக இருக்கப் போகிறது. 21-ம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது என பிரதமர் கூறினார்..

Follow Us:
Download App:
  • android
  • ios