அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாக  குற்றம்சாட்டிய  பிரதமர் மோடி, . பிரதமர் நாற்காலிக்கு என்ன அவசரம்? ஜனநாயகத்தில் எந்த அவசரமும் இல்லை என்றும்  இந்த நாற்காலிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை மக்கள்தான்  தீர்மானிப்பார்கள் என்றும் பேசினார்..

மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று  காலை முதல் நடைபெற்றது.  சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி, மோடி மீதும் பாஜக அரசு மீதும்  அடுக்கடுக்கான குற்றச்ச்ட்டுகளை சுமத்தினார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு இரவு 9.30 மணிக்கு பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார்.

அப்போது நாட்டுக்கு வளர்ச்சி வேண்டாம் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். அதனால் வளர்ச்சிக்கான யுத்தம் நடந்து வருகிறதோ என தனக்கு தோன்றுவதாக தெரிவித்தார்.   எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் தோல்வியடைந்து விடுவோம் என தெரிந்தே எனது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இன்று நடந்த விவாதம் மூலம் எதிர்க்கட்சிகளின் எண்ணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேசத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஓன்றிணைந்த செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம் என மோடி குறிப்பிட்டார்..என்னை பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தது 125 கோடி மக்கள்.  ஆனால் அதிகார பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர் என நினைக்கிறேன். என குறிப்பிட்டார்.

இங்குள்ள சிலர் பிரதமராக வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர்.இது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு. எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்கின்றனர். தான் பிரதமராக வேண்டும் என்பதற்காக ராகுல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார் என மோடி தெரிவித்தார்.

ராகுல் பிரதமராக ஏன் அவசரப்படுகிறார் . பிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா என கூறிய பிரதமர் ராகுலை கிண்டல் அடித்து நடித்து காண்பித்தார்.தொடர்ந்து மோடி  பேசி வருகிறார்