மத்திய சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், தான் டெபாசிட் கூட வாங்கபோவதில்லை என்கிற உண்மை தெரிந்தவுடன் பயங்கர அப்செட்டில் வாக்குச் சாவடியை விட்டு வெளியேறினார்.

தமிழக நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று மட்டுமே முடிந்துள்ள நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் பெரும்பாலான தொகுதிகளில் நான்காவது இடத்திலேயே இருந்து வருகிறது. இப்போதைய நிலவரப்படி அக்கட்சி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கும் நிலையில் இல்லை.

இந்நிலையில் மத்திய சென்னையில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் கமீலா நாசர் முதல் சுற்று முடிவில் 2600 வாக்குகளே பெற்றிருக்கிறார். அத்தொகுதியில் திமுகவின் வேட்பாளர் தயாநிதி மாறன் 29000 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். தனது தோல்வி உறுதியானது மட்டுமின்றி தன்னால் டெபாசிட் கூட வாங்கமுடியாது என்பதைப் புரிந்துகொண்ட கமீலா முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்குப் பதிவு  எண்ணிக்கை மய்யத்தை விட்டு வாக் அவுட் செய்தார்.