M.Natarajan was the driving force of the aiadmk - Nanjil Sampath
ஒன்றரைக்கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தின் உந்துவிசையாக இருந்தவர் ம.நடராஜன் என்று நாஞ்சில் சம்பத் தன்னுடைய இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிபட்டு வந்த சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு ம.நடராஜன் வீடு திரும்பினார்.
அவருக்கு தொடர்ந்து வீட்டில் இருந்தே செக் அப் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16 ஆம் தேதி இரவு
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.35 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு
தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ம.நடராஜனின் மறைவு தொடர்பாக, நாஞ்சில் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார். இனத்திற்கும் மொழிக்கும் கையெழுத்தாகி காலமெல்லாம் காவியம் செய்தவர் அண்ணன் ம.நடராஜன். தமிரீக் கொள்கையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற சகலகலா வல்லவன் நடராஜன்.
ஒன்றரைகோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தின் உந்துவிசையாக இருந்தவர். நாலாவது தமிழீழ போரில் மடிந்த மாவீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ராஜராஜசோழன் காலமாகி விட்டார். அவரது இழந்து தவிக்கிற எங்கள் சசிகலா அவர்களுக்கும், அவர்து குடும்பத்திற்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
