சென்னையில் வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் தேசிய குடியுரிமை  சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.  இதில்  பங்கேற்ற தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு  மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட அனுமதிக்க மாட்டோம் என சென்னை வண்ணாரப்பைட்டையில் நடந்து வரும் போராட்ட களத்தில் தனியரசு எம்எல்ஏ ஆவேசமாக கூறியுள்ளார். சென்னையில் வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் தேசிய குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது பேசிய அவர், பாஜக உள்ளிட்ட மதவெறி குழுக்களின் அரசியல் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன், மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட என்றும் அனுமதிக்க மாட்டோம் என சூளுரைத்தார், தமிழக அரசு குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதே நல்லது எனவும் தனியரசு கேட்டுகொன்றார். பாஜகவோடு கூட்டணி வைத்த காரணத்தால் அதிமுக அரசு பல பழிகளையும் சுமக்கிறது என சாடினார்.

பாஜகாவால் அதிமுக தேவையில்லா சுமைகளையும் சுமப்பதாக தனியரசு கூறினார். பிறகு, வண்ணாரப்பேட்டை போராட்ட களத்தில் , அங்கு குழுமியிருந்த இந்து சமுதாய சகோதரிகளை அழைத்து அவர்களின் பொது நல அக்கறையை மனம் திறந்து பாராட்டியதோடு , இப்படி தான் நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என கூறினார். அப்போது மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.