செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்ட கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து ட்விட்டர் பதிவை  டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார். 

பாமக வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்தி சென்றதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய நிலையில் திமுக எம்எல்ஏ நந்தக்குமார் அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

வேலூர் மாநகராட்சி 24வது வட்டத்தில் தோல்வி பயம் காரணமாக பாமக வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச்சென்று போட்டியில் இருந்து விலக வேண்டும் இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்ட கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து ட்விட்டர் பதிவை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பாமக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில், வேலூர் திமுக மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களே.. எங்களால் கடத்தப்பட்டதாக நீங்கள் கூறிய பரசுராமன் தனியாக வந்து வேலூர் மாவட்ட செயலாளர் என்ற முறையில் என்னையும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் சந்தித்து சால்வை அணிவித்து தனக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டதை பாருங்கள். அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இந்த உண்மையை நன்கு விசாரிக்காமல் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல. காரணம் பாமக வேட்பாளரை மிரட்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர் தரப்பில் இருந்து ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 5 நிமிடம் ஓடும் அந்த வீடியோ பதிவில் ஹோட்டலுக்கு பாமக வேட்பாளர் பரசுராமன் பிப்ரவரி 5ம் தேதி இரவு 10.45 மணிக்கு வருவதும், அங்குள்ள ஹோட்டலின் அலுவலக அறைக்கு சென்று அமர்ந்து வேலூர் எம்.எல்.ஏ கார்த்தியுடன் உரையாடுவதும், அந்த அறைக்கு திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான நந்தகுமார் வருவதும் இருவருக்கும் பாமக வேட்பாளர் சால்வை அணிவித்து உரையாடுவது அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பாமக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாமக வேட்பாளரும், பாமக நிர்வாகிகளும் திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாநகர செயலாளர் கார்த்தி இருவரும் பாமக வேட்பாளரை கடத்தினார் என பொய்யாக ஒரு தகவலை தங்களது மேலிடத்துக்கு தெரிவித்துள்ளனர்.

Scroll to load tweet…

அதனை நம்பி மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது பொய்யென நிரூபிக்கும் விதமாக திமுக எம்எல்ஏ நந்தகுமார் வெளியிட்டுள்ள வீடியோ ராமதாஸ் சொன்னது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.