mla meeting today 3 pm dinakaran invited

இன்று பிற்பகல் 3 மணிக்கு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைப்பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மற்றும் கழகத்தில் இருந்து தினகரன் குடும்பத்தை நீக்க அமைச்சர்கள் ஒன்றாக கூடி ஆலோசித்து முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதியதாக தினகரன் அணி உருவாகி உள்ளதால் அதிமுக கட்சியானது தற்போது மூன்று அணிகளாக உள்ளது என்றே கூறலாம்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவசர அவசரமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த கூட்டத்தில் அனைத்து எம் எல் ஏக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார் .

இந்த கூட்டத்திற்குபின், முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்கப்படுகிறது.