Asianet News TamilAsianet News Tamil

"டிடிவி அளித்த பதவியே வேண்டாம்" - மேலும் ஒரு எம்.எல்.ஏ. மறுப்பு!!

mla bose refused to accept the posting
mla bose refused to accept the posting
Author
First Published Aug 5, 2017, 11:45 AM IST


கட்சியில் அங்கீகாரம் இல்லாத டி.டி.வி. தினகரன் அளித்த மகளிர் அணி இணை செயலாளர் பதவி தேவையில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படப் போவதாகவும், பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ், தினகரன் அளித்த பதவியை ஏற்க மறுத்துள்ளார்.

அதிமுக அம்மா அணியில் 18 அமைப்பு செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகளை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

புதிய நிர்வாகிகளில் எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், எஸ்.டி.கே. ஜக்கையன் உள்ளிட் 18 பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிப்பட்டுள்ளனர்.

mla bose refused to accept the posting

அதேபோல் புரட்சி தலைவி அம்மா பேரவைக்கு 8 இணைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீனவர் பிரிவு, விவசாய, மகளிர் பிரிவுகளுக்கு இணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியில் அங்கீகாரம் இல்லாத டி.டி.வி. தினகரன் அளித்த மகளிர் அணி இணை செயலாளர் பதவி தேவையில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் செயல்படப் போவதாகவும் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் கூறியிருந்தார். அதேபோல் எம்.எல்.ஏ பழனியும், ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தார்.

mla bose refused to accept the postingஇந்த நிலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ், தினகரன் அளித்த பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். விவசாய பிரிவு இணைச் செயலாளராக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios