சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை…நீதி கேட்டு மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம்…

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்தும்,ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

இந்தப் போராட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கே. என். நேரு மற்றும் விவசாய சங்கங்கள் பங்கேற்றுள்ளன. போராட்டம் 9 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஸ்டாலின் 8.50 மணிக்கே மேடைக்கு வந்து விட்டதால் தொண்டர்கள் அவசர அவசரமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருதே நடைபெற்று வரும் போராட்டத்தில் டி.ஆர்.பாலு, ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போன்று வேலுர், மதுரை,சேலம்,நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது