சரித்திரச் சிறப்புவாய்ந்த இந்த சாதனை வெற்றியை வையகமே வியந்துபோற்றுகிறது, ‘என்றும் மக்களுக்காகவேநாம்’ என்ற உறுதியுடன்,நம் கடன்  தொண்டூழியம்புரிவதே! என்றும் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
 
பதினேழாவதுமக்களவைக்கு நடைபெற்றதேர்தலில், தமிழகத்தில், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில்,கழகத் தலைவர்  தளபதிமு.க.ஸ்டாலின் அவர்கள்,தொலைநோக்குடன் அமைத்தமதசார்பற்ற முற்போக்குக்கூட்டணிக்கு, 38 தொகுதிகளில் 37தொகுதிகளிலும், 22 சட்டமன்றத்தொகுதிகளில் 13தொகுதிகளிலும், புதுச்சேரியில்உள்ள ஒரு மக்களவைத்தொகுதியிலும், ஒரு சட்டமன்றத்தொகுதியிலும், வரலாறுதிரும்புகிறது என்றுமகிழ்ந்திடும் வகையில், மகத்தான வெற்றியைவழங்கிய தமிழ்நாடு மற்றும்புதுவை மக்களுக்கும், இந்தவெற்றியை பெறுவதற்காகபாடுபட்ட கழக நிர்வாகிகள் -தோழர்களுக்கும், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் -தொண்டர்கள் அனைவருக்கும்,கழக நாடாளுமன்றஉறுப்பினர்களின் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியைப்பலநூறு முறை தெரிவித்துக்கொள்கிறது.

சரித்திரச் சிறப்புவாய்ந்த இந்த சாதனை வெற்றியை வையகமே வியந்துபோற்றுகிறது. 

‘மக்களிடம்செல்வோம், மக்களிடம்சொல்வோம், மக்கள்மனங்களை வெல்வோம்’ என்றதனிப்பெரும் முழக்கத்தைமுன்னிறுத்தி, திராவிடமுன்னேற்றக் கழகத்தின்தலைமையில் அமைந்தகூட்டணிக்கு, தமிழகத்தில்பதிவான வாக்குகளில் 2கோடியே 23 லட்சத்து 3ஆயிரத்து 310 வாக்குகளைஇந்தக்  கூட்டணிக்கு அளித்து,திசை திருப்ப முயன்றவர்களைசெல்லுபடி இல்லாதவர்கள்என்றாக்கி, தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா - தலைர் கலைஞர் ஆகியோர் போற்றிவளர்த்து, பண்படுத்தியதுதிராவிட மண்ணான இந்தச்செம்மொழித்  தமிழ்நாடுஎன்பதை அகில இந்தியஅளவில் எவ்வித அய்யப்பாடும்இன்றி உணர்த்தியிருக்கும்தமிழக வாக்காளப்பெருமக்களின் உன்னதமானஉரிமைப் போர் உலகத் தமிழர்ஒவ்வொருவரையும் பெருமிதம்கொள்ள வைக்கிறது.

ஊடகவியலாளர்கள் -பத்திரிகையாளர்கள்ஆகியோரின் ஒத்துழைப்புநினைவில் கொள்ளத்தக்கது.இந்த உணர்ச்சிமிகு, உயர்வானகாட்சியைக் காணவும், வாழ்த்திமேலும்  வழிகாட்டவும்,முத்தமிழறிஞர் கலைஞர்அவர்கள் இல்லையே என்றஏக்கப் பெருமூச்சு ஒவ்வொருநாடாளுமன்ற உறுப்பினரின்இரத்த நாளங்களிலும்நிறைந்து  இருக்கிறது.

ஆனாலும் அவர் இருந்தஇடத்தில் இருந்து, நாளும்நயம்பட உழைத்து, எங்களைஎல்லாம் ஆக்கம் தரும் அரியவழிநடத்தி - இந்தியாவேவியந்து போற்றும் தகுதிமிக்க தலைமைப் பண்புடன், எஃகுத்தன்மை வாய்ந்த தொரு கூட்டணியை  அமைத்து - எங்களுக்காக  ஒவ்வொருஊரிலும், ஒவ்வொருதெருவிலும்,  ஒவ்வொருதிண்ணையிலும், காடுமேடுகழனி அனைத்திலும் அனல்பறக்கும் பிரச்சாரத்தில், அனுதினமும், அல்லும் பகலும்ஈடுபட்டு,  1971,2004 நாடாளுமன்றத்  தேர்தல்களில் தலைவர்  கலைஞர்  அவர்கள் ஈட்டித்  தந்த  மிகப்பெரிய வெற்றிகளுக்கு இணையானவெற்றியைப் பெற்ற -தன்மானத் தந்தைக்கேற்ற தனிப் பெருமைமிக்கதனயனான,  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின்  இந்தக்கூட்டம் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டின்உரிமைகளை மீட்டிடவும், நாட்டில்உண்மையான  ஜனநாயகம்தழைத்தோங்கவும், சமூகநீதிமேம்படவும், சமத்துவம்போற்றப்படவும்,மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும் - அரசியல்சட்டம் அனைவருக்கும்அளித்துள்ள அடிப்படைஉரிமைகளை அச்சமின்றிப் பெற்றிடவும்,  கழகத் தலைவர்அவர்களின் சீரியவழிகாட்டுதலில் தமிழ்நாட்டின்வளர்ச்சிக்கும், நாட்டின்முன்னேற்றத் திற்கும்ஆக்கபூர்வமான முறையில்அயராது பணியாற்றிடவும்,தலைவர் கலைஞர் அவர்கள்இயற்றித் தந்திருக்கும்ஐம்பெரும் முழக்கங்களான“அண்ணா வழியில் அயராதுஉழைப்போம்! ஆதிக்கமற்றசமுதாயம் அமைத்தேதீருவோம்!  

இந்தித் திணிப்பைஎன்றும் எதிர்ப்போம்! வன்முறை தவிர்த்துவறுமையை  வெல்வோம்!மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில்கூட்டாட்சி!”  என்பதைஇதயத்தில் ஏந்தி, அவற்றையேவழிகாட்டும்ஒளிவிளக்குகளாகக் கொண்டுஇலட்சியப் பயணம்மேற்கொண்டிடவும், ‘மக்களே நம்எஜமானர்கள் - மக்களே நமதுமகேசர்கள்’ என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணி ஆற்றிடவும், நாடாளுமன்றஉறுப்பினர்களின் இந்தக்கூட்டம் உறுதியெடுத்துக்கொள்கிறது