Asianet News TamilAsianet News Tamil

வாழ்த்த நினைக்கும் மு.க.ஸ்டாலின்... வீழ்த்த நினைக்கும் உடன்பிறப்புகள்..!

தமது ஆட்சியை சிறப்பாக நடத்தி அனைத்து மக்களிடமும் வாழ்த்து பெற நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், உள்ளூர்களில் உள்ள லோக்கல் திமுகவினர் செய்யும் அட்ராசிட்டி திமுகவை வீழ்த்தும் நிலை உருவாகியுள்ளது.  
 

MK Stalin who wants to congratulate ... siblings who want to defeat
Author
Tamil Nadu, First Published Sep 9, 2021, 5:50 PM IST

தமது ஆட்சியை சிறப்பாக நடத்தி அனைத்து மக்களிடமும் வாழ்த்து பெற நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், உள்ளூர்களில் உள்ள லோக்கல் திமுகவினர் செய்யும் அட்ராசிட்டி திமுகவை வீழ்த்தும் நிலை உருவாகியுள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகப்பேறு மருத்துவமனையில் இருந்த சைக்கிள் ஸ்டாண்டை அகற்றி, மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சியாக இருந்தபோது, தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். MK Stalin who wants to congratulate ... siblings who want to defeat

தற்போது, அந்த சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகையை தி.மு.க.,கார்களே கைப்பற்றி இருக்கிறார்கள். அதே மாதிரி, நகராட்சி பகுதிகளில் இருக்கற கட்டண கழிப்பறைகளையும் அவர்களே ஆக்கிரமித்து விட்டனர். பேருந்து நிலைய கடைகளின் குத்தகை தொகையை குறைத்து ஏலம் எடுக்கற முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில், அ.தி.மு.க.,வினருக்கு எது எதில் வருமானம் வந்தது என கணக்கு எடுத்து, அதில், இருந்து ஒரு பைசா கூட குறையக்கூடாது என சபதம் போட்டு, தி.மு.க.,காரர்கள் தீயாக வேலை செய்து வருகின்றனர்.

 MK Stalin who wants to congratulate ... siblings who want to defeat

அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு கூடாது என முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். பொள்ளாச்சி தி.மு.க.,காரர்கள் செய்கிற 'அட்ராசிட்டி' எல்லாம் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு போகிறதா எனத் தெரியவில்லை. கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்த நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் திமுகவினரின் செயல் அதற்கு ஆப்பு வைப்பதாகவே இருந்து வருகிறது. இந்தப்போக்கு கோவையில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. பேருந்து நிலைய கடைகள், பொதுக்கழிப்பறைகள், ரேஷன் கடைகள் என அனைத்து இடங்களிலும் திமுகவினர் அட்ராசிட்டி செய்வதாகவும், இது திமுக தலைமைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்கிறார்கள் அக்கட்சியை சேர்ந்த நலம் விரும்பிகள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios