கரும்பு வயல் கான்கிரீட் ரோடு கண்மாய் கரை சிவப்பு கம்பளம்... என்கிற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், ‘’கான்கிரீட் ரோடுபோட்டு கரும்பு வயலை பார்வையிட்டவர் திருவாளர் துண்டு சீட்டு என்றால் அவரது மகனோ கண்மாய் கரையில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்று நீர்நிலைகளை பார்வையிடுவதாக ரிப்பன் வெட்டி பஃபூனாகி திரிகிறார்.

 

இந்த நகைச்சுவை காட்சிகளின் தொடர்ச்சியாக இப்போது திருவாளர் சுடலை கீழடியில் ஆய்வு செய்கிறேன் என்று அங்கே போய் நின்று கொண்டு அகழ்வாராய்ச்சியை அகவாழ்வு என்று பிறழ பேசி சிரிக்க வைக்கிறார்.  இவர்களை பொறுத்தவரை பொதுவாழ்க்கை என்பது மக்களுக்காக பாடுபடுபவர்கள் போல நடிப்பதும், அந்தக் காட்சிகளை தங்கள் குடும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்து மக்களை நம்ப வைப்பதும் தான்.

ஆனால், ’தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம்பிடித்தால் சுயநலம் உண்டு’என அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே நம் புரட்சித் தலைவர் மேற்படி கோமாளித் தனங்களை தனது திரைப்படங்கள் மூலமாக மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்ட நிலையில்  இப்போது அப்பன், மகன் செய்கைகள் அனைத்தையும் வலைதளவாசிகளுக்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி எபிசோடுகளாக களைகட்டிக் கொண்டிருக்கிறது. 

நம் மக்கள் திலகம் தீர்க்கத்தரிசனமாக அன்று சொன்னதை இன்று ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் தங்கள் செய்கைகளால் உண்மையாக்குகிறார்கள். கூடவே உலகையே குலுங்கி சிரிக்கவும் வைக்கிறார்கள். ஆக... ஆக.. ஆக..’’என விமர்சித்துள்ளனர்.