திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தக்வல் வந்துள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜேந்திரபாலாஜி, ’’மு.க.ஸ்டாலின் காங்கிரஸில் சேரப்போவதாக இரு தினங்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில், ’’மு.க.ஸ்டாலினை போல தலைவர் தமிழகத்தில் ஒருவரும் இல்லை. அவரது தகுதிக்கும், திறமைக்கும் இன்னும் 25 ஆண்டுகளில் ஸ்டாலின் ஜனாதிபதி ஆவது உறுதி’ என திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று தெரிவித்து இருந்தார்.

 

அதற்கு பதிலளித்துள்ள அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "ஸ்டாலின் காங்கிரஸில் சேரப்போவதாக நான் ஏற்கனவே சொன்னேன். இப்போது அது உண்மை ஆகிவிட்டது. ஏனென்றால் "ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ எதுவா இருந்தாலும் நான் காங்கிரஸில் சேர்ந்துவிடுகிறேன், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துங்கள்" என்று ஸ்டாலினே காங்கிரஸ் தரப்பில் கேட்டு கொண்டதாக எனக்கு தகவல் வந்துவிட்டது. 

அதைதான் உங்களுக்கு 2 நாளைக்கு முன்னாடியே சொன்னேன். நான் விசாரிச்ச வரைக்கும் அந்த தகவல் உண்மைன்னுதான் சொல்றாங்க. அதற்கு ஏற்றாற்போல, துரைமுருகனும், மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என சொல்லி இருக்கிறார். அதனால் ஸ்டாலின் ஜனாதிபதியா மட்டுமில்லை.. அமெரிக்க அதிபராகக் கூட வரட்டும், அதைப்பற்றி கொஞ்சம்கூட கவலை இல்லை. அவர் தமிழ்நாட்டை விட்டுப் போனால் சரிதான்" என அவர் தெரிவித்துள்ளார்.