மோடியை சேடிஸ்ட், திருடன் எனக் கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி இரண்டாவது முறையாக பிரதமராவதால் வாழ்த்துக்களை கூறி சரணடைந்துள்ளார்.

 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 345 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால் மத்தியில் மீண்டும் பாஜக அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ‘’வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். ஜனநாயகத்துடனும், கொள்கையுடனும், அமைய உள்ள அரசை எடுத்துச் செல்வீர்கள் என நம்பிக்கை இருக்கிறது.’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

மற்றொரு ட்விட்டில், ’தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.