தமிழகம் விரைவில் ஸ்டாலினை முதல்வராக்கிக் காட்டும் என திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி மக்களவை வேட்பாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

 

ஓட்டப்பிடாரத்தில் திமுக தேர்தல் காரியாலயத்தை கனிமொழி திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், நாடு முழுவதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆணையத்தின் செயல்பாடுகள் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.  தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆளும் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

அதனால் தான் தேர்தல் ஆணையத்தை வைத்து அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.  திடீரென எடுக்கப்படக் கூடிய இந்த நடவடிக்கைகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படுள்ளது. தெளிவுப்படுத்த வேண்டியது அவர்களது கடமை’’ என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்காக பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் ஒரு குழந்தைக்கு கனிமொழி எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அண்ணனை முதல்வராகவும், தங்கையை எம்.பியாகவும் ஆக்கியே தீர வேண்டும் என இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து வருகின்றனர்.