Asianet News TamilAsianet News Tamil

கேரளாவுடன் மு.க.ஸ்டாலின் அரசு ரகசிய ஒப்பந்தம்... அதிமுகப் ஆட்சியில் நடந்த ஊழல்... பகீர் கிளப்பும் அண்ணாமலை..!

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, நொண்டிக் காரணங்களைச் சொல்ல அமைச்சர் இப்போது அணையைப் பார்வையிடுகிறார்.

MK Stalin's secret government deal with Kerala ... Corruption in the AIADMK regime ... Pakir club Annamalai
Author
Tamil Nadu, First Published Nov 6, 2021, 2:20 PM IST

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுடன் தமிழக அரசு “ரகசிய ஒப்பந்தம்” செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்த நிலையில் சமீபத்தில் அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தது பாஜக. தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் தெரிவித்துள்ளார்.MK Stalin's secret government deal with Kerala ... Corruption in the AIADMK regime ... Pakir club Annamalai

இதுகுறித்து பேசிய அவர், ‘’ஷட்டர்களை திறக்க மாநில அரசு வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள அரசுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார். அணையின் ஷட்டர்களை திறக்க தமிழகத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், கேரள வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்கள் அதன் ஷட்டர்களை திறந்துவிட்டனர். 

இதையும் படியுங்கள்:- எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து யாரால் முதல்வரானார் என்பது உலகிற்கே தெரியும்.. மீண்டும் சீனாக சீனுக்கு வரும் TTV.!

கடந்த காலங்களில் ஷட்டர் திறக்கப்படும் போதெல்லாம் தேனி கலெக்டரும், தமிழக அமைச்சர் ஒருவரும் உடனிருந்தனர். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. 5 மாவட்ட விவசாயிகளின் நலன்களுக்கு திமுகவும், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் துரோகம் இழைத்துவிட்டன. முல்லைப்பெரியாறு அணையில் 136 அடி வரை நீர் இருந்தபோதே, அவசர அவசரமாக தண்ணீர் திறக்கப்பட்டது ஏன்?MK Stalin's secret government deal with Kerala ... Corruption in the AIADMK regime ... Pakir club Annamalai

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அணையை ஆய்வு செய்தது, “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல” என்று அவர் கூறினார். தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, நொண்டிக் காரணங்களைச் சொல்ல அமைச்சர் இப்போது அணையைப் பார்வையிடுகிறார். மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம்,சுவா நிதி திட்டத்தின் மூலம் சகோதரி அஸ்வினிக்கு முதல்வர் ஸ்டாலின் உதவி செய்ததற்கு நன்றி. பிரதமரின் அனைத்து திட்டங்களும் சகோதரி அஸ்வினி போன்றவர்களுக்காக த்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.MK Stalin's secret government deal with Kerala ... Corruption in the AIADMK regime ... Pakir club Annamalai

இதையும் படியுங்கள்:- எங்க சாதியை அசிங்கப்படுத்த பொய் சொல்லி இருக்கீங்க... ஜெய் பீம் படக்குழுவுக்கு வன்னியர் சங்கம் கண்டனம்..!

தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.246 கோடி ஊழல் நடந்து இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே இந்த ஊழல் நடந்துள்ளதாக அக்டோபர் மாதம் நடந்த கணக்கு தணிக்கையில் இது தெரிய வந்துள்ளது. ஊழல் செய்யப்பட்டதில் ரூ.ஒரு கோடியே 85 லட்சம் மட்டுமே தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது. விரைவாக அனைத்து பணத்தையும் மீட்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்க வில்லை. உடனடியாக குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறுவது முற்றிலும் தவறானது. அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.’’ என அண்ணாமலை குற்றம்சாட்டினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios