பரபரப்பான சூழ்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநில உரிமைகளை மத்தியில் உள்ள ஆட்சி பறித்து வருகிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக தார்மீக அடிப்படையில் முழு ஆதரவளிக்கும் என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் எதுவும் நடக்காதது போல் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் பேசுகிறார் என மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை நடந்த வருமாக வரிச்சோதனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. இதுகுறித்து து புகார் அளிக்க வரும் 23-ம் தேதி ஆளுநரை சந்திக்க உள்ளேன். 8 வழிச்சாலையை ஆதரித்து ரஜினி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் நடந்த முறைகேடுகளுக்கு ஆதாரம் உள்ளதை முதல்வர் எடப்பாடி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.