Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவிலேயே எங்க அண்ணனைத் தவிர யாருக்கும் துணிவில்லை.. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளும் கனிமொழி..!

இந்தியாவில் பாஜக.,வை எதிர்த்த முதல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார். 

MK Stalin is a praise Kanimozhi
Author
Tamil Nadu, First Published Sep 10, 2019, 4:57 PM IST

இந்தியாவில் பாஜக.,வை எதிர்த்த முதல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார். 

மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி, ‘’தி.மு.க இளைஞர் அணி ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் இளைஞர் அணியில் இருந்து தான் வந்துள்ளனர்.MK Stalin is a praise Kanimozhi

இப்போதுள்ள இளைஞரணி செயலாளர் இளைஞர் அணி கூட்ட தீர்மானத்தில் குளம், நீர், நிலைகளை தூர்வாருவோம் என குறிப்பிட்டது மிகவும் பாராட்டுக்குரியது. தற்போது தூத்துக்குடியில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று மக்களுக்கு விநியோகிக்கும் நிலை உள்ளது. மக்கள் உடைந்த குழாய்களில் இருந்தும் தண்ணீர் பிடித்து குடிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய இப்போது உள்ள ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாசிச பா.ஜ.க.வை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் உங்களது முழக்கமாக இருக்க வேண்டும். மக்களை பிரித்தாளக் கூடிய இயக்கம் பா.ஜ.க. இப்போதுள்ள அ.தி.மு.க அரசு, பா.ஜ.க.வுக்கும், அக்கட்சியின் செயலுக்கும் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.MK Stalin is a praise Kanimozhi

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் தி.மு.க.வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இப்போது நமக்கும் கிடைக்கும் கல்வி, வேலை என்பது சாதாரணமாக வந்து விடவில்லை. பல போராட்டம் கடந்து தான் கிடைத்து இருக்கிறது. முதலில் நாம் நமது சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பா.ஜ.க.,வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின் தான்.MK Stalin is a praise Kanimozhi

தொடர்ந்து தி.மு.க. இளைஞரணியினர் மக்களை சந்திக்க வேண்டும். இந்த அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தை பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது. அதனால், நாம் வலி மிகுந்த சூழலில் உள்ளோம். இதை சரி செய்ய தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios