Asianet News TamilAsianet News Tamil

கீதா வீட்டு சோறு ஸ்டாலினுக்கு..! சொந்த வீட்டு சோறு எடப்பாடிக்கு... தேர்தலையெல்லாம் தாண்டி சோறு முக்கியம் தலைவரே..!

ஓய்வறியா உழைப்பாளி ஸ்டாலினின் உறக்கம், உணவு பற்றிக் கேட்கவே வேண்டாம். அத்தனை பேரும் ஆச்சரியமாய் பார்க்கும் ஸ்டாலினின் சாப்பாடு பற்றிய ஒரு சுவாரஸ்ய பிட் இது. அதாவது தூத்துக்குடிக்கு எப்போது ஸ்டாலின் வந்தாலும், அவருக்கு மாஜி அமைச்சர் கீதா ஜீவன் வீட்டில் இருந்துதான் உணவு போகும். 

MK Stalin food
Author
Tamil Nadu, First Published Apr 16, 2019, 5:22 PM IST

ஆளப்படுறவனுக்கு அரை சாண் வயிறென்றால், ஆளுறவனுக்கு என்ன ஆறடிக்கா வயிறு இருக்கிறது? எல்லோரும் உழைப்பது இந்த அரை சாண் வயிற்றை நிரப்பத்தானே? இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்ன? எல்லோரும் சமம்தான். 

நாடாளும் மன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைதேர்தல் பரபரப்பின் கடைசி நாள் இன்று. இதுவரையில் தமிழகமெங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோலாகலமாக ஊர்வலம் வந்தாலும் கூட, முதல்வர் பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் கில்லியாக களத்தில் நின்றதுதான் செம்ம ஹைலைட்டு. எப்பதான் தூங்குறாங்க? எவ்வளவு நேரம்தான் தூங்குறாங்க? என்று அறிய, புரிய முடியாத அளவிற்குதான் இருவரின் உழைப்பும் இருக்கிறது. MK Stalin food

இந்த நிலையில், இந்த இரண்டு தலைவர்களின் சாப்பாடு குறித்து வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு சுவாரஸ்ய தகவல். எடப்பாடி பழனிசாமி கடந்த ஒரு வாரமாக கொங்கு மண்டல மற்றும் வடக்கு மண்டல மாவட்டங்களிலேயே சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். எந்த மாவட்டத்தில் பிரசாரம் என்றாலும்...பத்து மணிக்கு மேல் முதல்வரின் கான்வாய் தன் மாவட்டமான சேலத்திலுள்ள தன் வீட்டை நோக்கி பறந்து வந்துவிடுகிறது. என்ன ஆனாலும் வீட்டு சாப்பாட்டைதான் இரவில் சாப்பிடுகிறார். அதன் பிறகு  ஆட்சி மற்றும் தேர்தல் பணிகளைப் பார்த்து முடித்துவிட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிக்கு மேல்தான் தூங்க வே போகிறாராம். ஆனால் காலை பிரசாரத்துக்கு ஷார்ப்பாக எழுந்து ஆச்சரியப்படுத்துகிறார். MK Stalin food
 
ஓய்வறியா உழைப்பாளி ஸ்டாலினின் உறக்கம், உணவு பற்றிக் கேட்கவே வேண்டாம். அத்தனை பேரும் ஆச்சரியமாய் பார்க்கும் ஸ்டாலினின் சாப்பாடு பற்றிய ஒரு சுவாரஸ்ய பிட் இது. அதாவது தூத்துக்குடிக்கு எப்போது ஸ்டாலின் வந்தாலும், அவருக்கு மாஜி அமைச்சர் கீதா ஜீவன் வீட்டில் இருந்துதான் உணவு போகும். இது பல வருட வழக்கம். ஆனால் இந்த முறை அவர் வீட்டு சாப்பாட்டை ஸ்டாலினுக்கு கொடுக்க அதே மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தரப்பு தடுத்திருக்கிறது. ‘பழைய பப்பெல்லாம் வேகாது. தளபதிக்கு நாங்கதான் சாப்பாடு கொடுப்போம்.’என்றாராம். MK Stalin food

உடனே ருத்ரதாண்டவமாட துவங்கிய கீதா....’காலங்காலமா எங்க தளபதிக்கு நாங்கதான் சேவை பண்ணிட்டிருக்கோம். அ.தி.மு.க.வுல இருந்து பொழைக்க வந்த நீங்க எங்களை தடுக்குறதா? முடிஞ்சா தடுத்துப் பாரு.’ என்று ஆடித் தீர்த்துவிட்டார். அலறிப்போன அனிதா கோஷ்டி வழியை விட...கீதா வீட்டு சாப்பாடு ஸ்டாலின் அறைக்குள் சென்று அடைக்கலமாகி இருக்கிறது. ஆம் சோறு முக்கியம் அமைச்சரே!

Follow Us:
Download App:
  • android
  • ios