Asianet News Tamil

பி.ஜே.பி.யை எதிர்க்கப் பயப்படுகிறாரா ஸ்டாலின்? ரிஸ்க் தொகுதிகளை கூட்டணிக்கு தள்ளிவிடும் தந்திரம்...!

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் தங்கள் கட்சி வளர்ந்திருக்கிறது என்று அதீதமாக நம்புகிறார்களாம் அம்மாவட்ட தி.மு.க.வினர்.
மேலும் அமைச்சர் வேலுமணியின் கோட்டையாக இந்த மாவட்டம் இருப்பதால் இங்கே கட்டாய வெற்றியை உருவாக்கி, தங்கள் கொடியை இங்கே நாட்டிடவும் அந்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆனால் இதற்கு எதிர்மாறாக இருக்கிறதாம் ஸ்டாலினின் திட்டம்.

MK Stalin fear
Author
Chennai, First Published Nov 14, 2018, 5:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

எங்கள் தளபதி, தலைவராக ப்ரமோட் ஆன பின்பு தி.மு.க. சந்திக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலானது மிக மிக முக்கியமானது. காரணம், தமிழகத்தைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவருக்கும், மோடி தலைமையிலான பி.ஜே.பி.க்கும்தான் மோதலே.’ என்று இணையதளத்தில் பெருமை பேசிக் கொண்டிருக்கிறாரக்ள் தி.மு.க.வினர் ஆனால் ஸ்டாலின் செய்வதைப் பார்த்தால், பி.ஜே.பி.வலுவான தொகுதிகளில் தன் கட்சியை நிறுத்தாமல், கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிடும் முடிவில் இருக்கிறார். இதை ‘பி.ஜே.பி. மீது ஸ்டாலினுக்கு பயமா?’ என்று விமர்சிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

 

இது பற்றி விரிவாக பேசுபவர்கள்...”நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் ஆசைப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் அத்தனை தொகுதி கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது காம்ரேடுகளுக்கு நன்கு தெரியும். எனவே மூன்று கிடைத்தால் சந்தோஷமே எனும் நிலையில் இருக்கிறாரகள். இதை நேற்று ஸ்டாலினுடனான சந்திப்பில் சீதாராம் யெச்சூரி வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். ஸ்டாலினும் தலையசைத்திருக்கிறார். காம்ரேடுகள் நினைத்த வண்ணம் மூன்று தொகுதிகள் கிட்டுமா கிட்டாதா என்பதை தேர்தல் நெருக்கத்தில் இரண்டு கட்சிகளின் பேச்சுவார்த்தை குழுக்களும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கும். 

இந்நிலையில் கம்யூனிஸ்டுகளுக்கு கொடுக்க வேண்டிய மூன்று தொகுதிகளை ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார்! என்று அவரது கட்சியினரே உறுதியாக தெரிவிக்கிறார்கள். கோவை, திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளை வட்டமிட்டு வைத்திருக்கிறாராம் ஸ்டாலின். இதில் கோவை, கன்னியாகுமரி இரண்டையும் நிச்சயம் காம்ரேடுகளுக்கே ஒதுக்க முடிவெடுத்துள்ளாராம். 

இதில்தான் தி.மு.க. நிர்வாகிகளுக்கே  கடும் கோபம். காரணம்?...கோயமுத்தூரில் தி.மு.க. நிச்சயம் களமிறங்க ஆசைப்படுகிறதாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் நிறைய தொகுதிகளை இழந்ததாலேயே ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது தி.மு.க. அதன் பிறகு இந்த மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தி நிறைய நிகழ்வுகளை நடத்தி வந்திருக்கிறார் ஸ்டாலின்.

 

இந்த காரணங்களால் கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் தங்கள் கட்சி வளர்ந்திருக்கிறது என்று அதீதமாக நம்புகிறார்களாம் அம்மாவட்ட தி.மு.க.வினர். மேலும் அமைச்சர் வேலுமணியின் கோட்டையாக இந்த மாவட்டம் இருப்பதால் இங்கே கட்டாய வெற்றியை உருவாக்கி, தங்கள் கொடியை இங்கே நாட்டிடவும் அந்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆனால் இதற்கு எதிர்மாறாக இருக்கிறதாம் ஸ்டாலினின் திட்டம். இதனால் கடுப்பாகியிருக்கும் கோயமுத்தூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ’நீங்க கன்னியாகுமரிய கொடுங்க, இல்லேன்னா கள்ளக்குறிச்சியை கொடுங்க. ஆனா கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில நம்ம கட்சி நின்னே ஆகணும்!  அவ்ளோதான். இல்லேன்னா நம்ம தளபதி (தலைவர்)க்குதான் அசிங்கம்.
 
ஏற்கனவே கன்னியாகுமரி, பி.ஜே.பி.யோட கையில இருக்குது. அங்கேயும் நாம நிக்க போறதில்லை, கோயமுத்தூர்லேயும் பி.ஜே.பி.க்கு வாக்கு வங்கின் அதிகம். இங்கேயும் நாம நிக்கலேன்னா ‘ஓஹோ உங்க தளபதிக்கு எங்களைப் பார்த்து பயம் போல இருக்குது. அதான் இவ்வளவு நடுங்கி கூட்டணிக்கு தள்ளிவிட்டிருக்கார்!’ன்னு மூஞ்சிக்கு நேரா கிண்டலடிப்பாங்க. 

கோயமுத்தூர் மட்டுமில்ல மதுரை, திருப்பூர்ன்னு பி.ஜே.பி.க்கு கணிசமா ஓட்டு இருக்குறத் தொகுதிகளையெல்லாம் கணக்கு போட்டு கூட்டணிக்கு தள்ளிவிடுறது அசிங்கமா இருக்குது. மக்களே மோடி மேலே தைரியமா கோபப்படும்போது நமக்கு என்ன பயம் வேண்டியிருக்குது? தெம்பா எதிர்த்து நிற்போம். அதனால தயவு செஞ்சு மானத்தை காப்பாத்துற மாதிரி முடிவெடுங்க.” என்று அறிவாலயத்துக்கே போன் போட்டு கெஞ்சியிருக்கின்றனர். இந்த தகவல் டி.ஆர்.பாலு வழியாக ஸ்டாலினிடமும் போய்விட்டது. என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Follow Us:
Download App:
  • android
  • ios