அடடே, மெர்சல் படம் தொடங்கி, காரப்பன் வரை ஹெச்.ராஜா "தொட்டதெல்லாம் துலங்குகிறது" என பதிவிட்டு ஹெச்.ராஜாவுக்கும் பகிர்ந்திருந்தார். 

நான் தொட்டதெல்லாம் துலங்கிறது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொட்டதெல்லாம் துலங்கவில்லையே என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சுப.வீரபாண்டியனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக ஆதரவாளரான எழுத்தாளரும், பேச்சாள்ருமான சுபவீ தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘’யாரும் எதிர்பார்த்திராத வகையில், சிறுமுகை காரப்பன் அவர்களுக்கான ஆதரவு பெருகி, முகநூல், ட்விட்டர் அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகிறது. அடடே, மெர்சல் படம் தொடங்கி, காரப்பன் வரை ஹெச்.ராஜா "தொட்டதெல்லாம் துலங்குகிறது" என பதிவிட்டு ஹெச்.ராஜாவுக்கும் பகிர்ந்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, '’ஆனால், ஸ்டாலின் தொட்டது துலங்க மாட்டேங்குதே. இன்று திமுக நிலைமை மல்லாக்க படுத்த காரப்பன் மன்னிக்கவும் கரப்பான் மாதிரி ஆயிடுச்சே’’எனப் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடுவோம். விரைவில் திமுக ஆட்சி மலரும் எனக் கூறி வந்தார் மு.க.ஸ்டாலின். அடுத்து காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளை கைப்பற்றியும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமையவில்லை. இதுவும் திமுகவுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமையும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் 13 தொகுதிகளை மட்டுமே வென்று திமுகவின் கனவு நிறைவேறாமல் போய் விட்டது. தற்போது 2 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்துள்ளது. இதனை மனதில் வைத்து ஸ்டாலின் தொட்டதெல்லாம் துலங்காமல் போவதாக ஹெச்.ராஜா கருத்துத் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…