Asianet News TamilAsianet News Tamil

வைகோவின் பட்டத்தை கனிமொழிக்கு சூட்டிய மு.க.ஸ்டாலின்... அண்ணனாச்சே... விட்டுக்கொடுப்பாரா..?

திமுக உறுப்பினர் கனிமொழியிடம் தோற்று போவதற்காகவே பாஜக தமிழக தலைவர் தமிழிசை இங்கு போட்டியிடுகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

mk stalin campaigning from thoothukudi
Author
Tamil Nadu, First Published Apr 10, 2019, 2:08 PM IST

திமுக உறுப்பினர் கனிமொழியிடம் தோற்று போவதற்காகவே பாஜக தமிழக தலைவர் தமிழிசை இங்கு போட்டியிடுகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 mk stalin campaigning from thoothukudi

தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, 
கவிஞா், சமூகப் போராளி உள்ளிட்ட பல்வேறு முகங்களைக் கொண்ட கனிமொழி. பார்லிமெண்ட் டைகா் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். பார்லிமெண்டரி டைகரான கனிமொழி தூத்துக்குடி டைகராகவும் இருப்பார்.mk stalin campaigning from thoothukudi
 
திமுகவிலிருந்து சிறந்த வேட்பாளரை தூத்துக்குடி மக்கள் பெற்றிருக்கிறார்கள். தூத்துக்குடி மக்கள் பிரச்சினைகளுக்கு கனிமொழி தீர்வு காண்பார். தோற்பதற்காகவே தமிழிசை இங்கு போட்டியிடுகிறார். பாஜக செல்வாக்கு மிக்க மாநிலங்களில்தான் கலவரங்கள் அதிகமாக நடந்துள்ளன. தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க பார்க்கிறார்கள். ஆனால் அதை திமுக அனுமதிக்காது. நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

நச்சு ஆலையாக மாறிவிட்ட ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழியில் மக்கள் போராடினார்கள். அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை தமிழக அரசு சுட்டுக் கொன்றது. எடப்பாடி அரசை தூக்கி எறிய வரும் 18-ஆம் தேதி தமிழக மக்கள் பன்படுத்திக் கொள்ள வேண்டும். எடப்பாடி அரசுக்கு தமிழக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி இரங்கல் கூட தெரிவிக்கிவில்லை.

 mk stalin campaigning from thoothukudi

வடமாநிலத்தில் ஒரு பிரச்சினை என்றால் மோடி அமைதியாக இருந்துவிடுவாரா? பிரதமர் மோடி பாசிச மனப்பான்மை கொண்டவர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென்று இந்தியா மீது அக்கறை வந்துள்ளது’’ என்று அவர் பேசினார். ஒரு காலத்தில் வைகோ பார்லிமெண்ட் ஆப் டைகர் என வர்ணிக்கப்பட்டார். இப்போது அந்தப் பட்டத்தை தனது தங்கை கனிமொழிக்கு சூட்டிவிட்டார் ஸ்டாலின். வைகோவை ராஜ்யசபா மூலம் எம்.பி சீட் கொடுக்க திமுக தலைமை முடிவு செய்திருந்தது. அப்படி அவர் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்  இனி யாரை பார்லிமெண்ட் ஆப் டைகர் என திமுகவினர் அழைப்பார்கள் நமக்கு தெரியாததா? 
 

Follow Us:
Download App:
  • android
  • ios