Asianet News TamilAsianet News Tamil

இந்தியத் துணைக்கண்டத்திலேயே நாங்க தான கெத்து... வரலாற்றில் சிறப்பான இடம் கிடைக்கும்!! ஸ்டாலின் சபதம்...

உச்சநீதி மன்ற தீர்ப்பு இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது 5 மாநில மொழிகளிலும் வெளியிட முடிவு செய்து அறிவித்து உள்ளது. இதில் பழமையான மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்மொழியிலும் உச்சநீதி மன்ற தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றனர்.
 

MK stalin Angry and request for Supreme court judgement
Author
Chennai, First Published Jul 3, 2019, 4:16 PM IST

உச்சநீதி மன்ற தீர்ப்பு இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது 5 மாநில மொழிகளிலும் வெளியிட முடிவு செய்து அறிவித்து உள்ளது. இதில் பழமையான மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்மொழியிலும் உச்சநீதி மன்ற தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடு வதற்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்புவதாக வெளி வந்துள்ள செய்தி மகிழ்ச்சி யளிக்கிறது. தி.மு.க. வின் சார்பில், இந்த நல்ல முயற்சியை மனதார வரவேற்கின்றேன்.

வழக்குகளைத் தொடுப்பவர்கள் மொழிப் பிரச்சனையின்றி எந்தவிதக் குழப்பமும் சந்தேகமும் இல்லாமல், தீர்ப்புகளின் சாரம்சத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், வழக்கை நடத்திய தங்களது வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த வாதங்களையும், எதிர்த் தரப்பின் பிரதி வாதங்களையும் நன்கு தெரிந்து புரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த முயற்சி இந்திய நீதி பரிபாலனச் சரித்திரத்தில் மிக முக்கிய மைல்கல் என்றே கருதுகின்றேன்.

இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிக ளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும். அதே வேளையில், தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது.

ஆகவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக் குப் பேருதவியாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. மேலும், தீர்ப்புகளின் மொழியாக்கத்தில், இந்தியத் துணைக்கண்டத்திலேயே மூத்ததும், முதன்மையானதும், இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்றுச் செழுமையானதுமான செம்மொழித்தமிழை, உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது, உலகத்தமிழர்கள் மற்றும் மேலை, கீழை நாடுகளின் தமிழறிஞர்களுக்குப் பல்வேறு அய்யப்பாடுகளைத் தோற்றுவித்துவிடும்.

எனவே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் இந்த வரவேற்கத்தக்க சீரிய முயற்சியின் விளைவாகத் தமிழ் மொழியிலும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும். அந்த அரிய செயலைச் செய்து அவர் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற வேண்டுமென்று, ஏழரைக் கோடித்தமிழக மக்களும் விரும்புகிறார்கள்.

ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, தி.மு.க.வின் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios