இப்போ இருக்கிற மாதிரி இல்லாமல், கருணாநிதி காலத்து உடன்பிறப்புகளாக கட்சியினர் மாறணும். அந்த காலம் வரும், வரவைப்பேன்.” என்று பேசிவிட்ட்டு மூச்சு வாங்க வாங்க இறங்கி சென்றிருக்கிறார். அண்ணனின் கார் கிளம்பும் வரையில் ஆர்ப்பரித்துவிட்டு, பிறகு அப்பாடா என நாற்காலியில் அமர்ந்த அவரது ஆதரவாளர்கள் ‘தலைவர் இருக்கும்போதே அண்ணனால் கட்சிக்குள் நுழைய முடியலை. இப்போ சின்னவரோ (ஸ்டாலின்) இவரை மதிக்கவே மாட்டேங்கிறார்யா. இவரும் ஒதுங்க மாட்டேங்கிறாரு.
தி.மு.க.வால் மதுரை வெடவெடத்தக் காலங்கள் என்று ஒன்று உண்டு. சத்யசாய் நகரில் இருந்து அழகிரியின் கார் கான்வாய் கிளம்புகிறதென்றால் ஒட்டுமொத்த சிட்டியும் போலீஸின் முழு கண்காணிப்பின் கீழ் வந்து நிற்கும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் சினிமாத்தனமான சீன்களால் திமிலோகப்படும் அந்த மண்.
கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தபோதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் அழகிரியை அவ்வளவு எளிதில் அவரது கட்சி யின் முக்கிய நிர்வாகிகளாலேயே நெருங்கிவிட முடியாது. மன்னன், எஸ்ஸார் கோபி, பொட்டு சுரேஷ், கோபிநாதன், முபாரக் மந்திரி, அட்டாக் பாண்டி என்று மிரட்டலான வட்டங்களைத் தாண்டித் தாண்டிதான் அவரை நெருங்க முடியும். ஒரு நிமிடம், இரண்டு நிமிடங்களைத் தாண்டி அண்ணனின் பக்கம் நின்றுவிட முடியாது. 
அஞ்சா நெஞ்சன் எனும் அடைமொழியுடன் மதரயில் வலம் வந்தவர் தி.மு.க.வினரால் ‘அண்ணன்’ என்றும், எதிர்க்கட்சியினரால் ‘அ-னா’ என்றும் மரியாதை மற்றும் சங்கேத வார்த்தையால்தான் குறிப்பிடப் பட்டாரே தவிர, ஓப்பனாய் பெயர் சொல்லி அழைக்கப்பட்டதில்லை. எந்த கருணாநிதியால் வளர்த்துவிடப்பட்டாரோ அந்த அழகிரி, அதன் பின் அதே கருணாநிதியாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, தந்தம் பிடுங்கப்பட்ட ஆண் யானையாக்கப்பட்டு இதோ இன்று வரை அலைக்கழிக்கப்பட்டு வருகின்றார். கருணாநிதி மறைவுக்குப் பின் எழுந்து நிற்க முயன்றவரை, சில அதிகார மையங்களின் உதவியோடு அமுக்கி உட்கார வைத்துவிட்டார் ஸ்டாலின். 
மீண்டும் மேலெழும்பிட முயன்று வரும் அழகிரி அடிக்கடி ‘நான் வந்துவிடுவேன், வென்றுவிடுவேன்.’ என்று பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால் காரியம் நடக்க மாட்டேன் என்கிறதே, என்று அவரது ஆதரவாளர்கள் நொந்து நூலாகின்றனர். நேற்று கூட மதுரையில் தன் ஆதரவாளர் வீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அழகிரி “என் அப்பா தலைவராக இருந்தபோது, கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி கிடைத்தது. ஆனால் இப்போதோ பினாமியாக மாவட்ட செயலாளர்களை வைக்கும் நிலையெல்லாம் உள்ளது. ஒரு மாவட்ட செயலாளருக்கு, பக்கத்து மாவட்ட செயலாளர் ‘Boss’ ஆக உள்ளார். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் போல் இந்த பினாமி மா.செ.க்கள் வேலை பார்க்கின்றனர். 
இந்த நிலை மாறணும்னு பொறுமையா இருக்கேன். இப்போ இருக்கிற மாதிரி இல்லாமல், கருணாநிதி காலத்து உடன்பிறப்புகளாக கட்சியினர் மாறணும். அந்த காலம் வரும், வரவைப்பேன்.” என்று பேசிவிட்ட்டு மூச்சு வாங்க வாங்க இறங்கி சென்றிருக்கிறார். அண்ணனின் கார் கிளம்பும் வரையில் ஆர்ப்பரித்துவிட்டு, பிறகு அப்பாடா என நாற்காலியில் அமர்ந்த அவரது ஆதரவாளர்கள் ‘தலைவர் இருக்கும்போதே அண்ணனால் கட்சிக்குள் நுழைய முடியலை. இப்போ சின்னவரோ (ஸ்டாலின்) இவரை மதிக்கவே மாட்டேங்கிறார்யா. இவரும் ஒதுங்க மாட்டேங்கிறாரு. 
இன்னும் எம்புட்டு நாளைக்குதேம் இவரை நம்பி காத்திருக்குறது? தேர்தல்கள்தான் கழியுது ஆனா நாம தேறுற மாதிரியில்லை. பேயாம சின்னவரு ரூட்ல போயி சேர்ந்துடலாமா?” என்று அங்கலாய்த்துள்ளனர். ஆதரவாளர்கள் பலரது இந்த ‘ரூட் மாறும் முடிவு’ அழகிரியின் காதுகளுக்குப் போக, மனிதர் மனம் விட்டுட்டாராம்!
