சென்னையில் அழகிரி கூட்டிய அமைதிப்பேரணி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதையொட்டி, மு.க.அழகிரி கட்சியில் பிளவு ஏற்படுத்துவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டினர். ஆனால், அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், திமுகவில் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அதை நிரூபிக்க பேரணி நடத்தப்போவதாகவும் அறிவித்தார். அதைதொடர்ந்து, நேற்று சென்னை வாலாஜாசாலையில் இருந்து, கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், மு.க.அழகிரி நடத்திய பேரணி, தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜக இல்லாமல் அரசியலில் ஒரு அணுவும் அசையாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக ஒழிக எனக் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலில் தமது கட்சி ஒழியாமல் பார்த்துக் கொள்ளட்டும். சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று நடத்திய பேரணி மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு அடிகோலாக இருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரம் எந்த கட்சியையும் உடைக்கும் நோக்கம், தங்கள் கட்சிக்கு இல்லை என்றார். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேசுகையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக சொல்வதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது என்றார். அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப்பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என கூறியுள்ளார். மேலும் மு.க.அழகிரியை பாஜக பக்கம் இழுக்க திட்டமிடப்படுகிறதோ என அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை, பாஜக கைவிட்டுவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.