தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3-ம் தேதி மதுரை வர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொண்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரையில் ஜனவரி 3-ஆம் தேதி ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆதரவாளா்கள் கூறும் முடிவுக்கேற்ப அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார். ஆதரவாளர்கள் கட்சி தொடங்க சொன்னாலும், தொடங்குவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3ம் தேதி மதுரை வர வேண்டும் என்றும் பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. ஸ்டாலினை முதலமைச்சராகவிடாமல் தடுப்பது தான் மு.க.அழகிரியின் வியூகம். ஆகையால், தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மு.க.அழகிரியின் அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.