ministers ready to go prison whose names in the document

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு அத்துமீறி நுழைந்த தளவாய் சுந்தரம், ஒரு முக்கிய ஆவணத்தை தமது உதவியாளரிடம் கொடுத்தார்.

அதை அங்கிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் கண்டு பிடித்து, அந்த ஆவணத்தை வாங்க முற்பட்டனர். அதற்குள் அந்த ஆவணத்தை, விஜயபாஸ்கரின் கார் டிரைவர் பறித்துக் கொண்டு வெளியில் ஓடி வெளியில் நின்றுகொண்டிருந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில், அதை வீசி எறிந்து விட்டார். அதை, ஆதரவாளர்கள் சிலர் பத்திரமாக எடுத்துக் கொண்டு, அங்கிருந்து ஓடிப்போய்விட்டார். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், வெளியில் நின்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் கேமராவிலும் பதிவாகி உள்ளது.

இதையடுத்து, அந்த ஆவணத்தை, அதிகாரிகள் கண்ணில்படாமல் வெளியில் தூக்கி எறிந்தது ஏன்? அந்த ஆவணத்தை அமைச்சர் மறைக்க முயன்றது ஏன்? அந்த ஆவணத்தில் இருந்தது என்ன? வருமான வரி சோதனை நடத்தும், விஜயபாஸ்கர் வீட்டுக்குள், தளவாய் சுந்தரம் அத்துமீறி நுழைந்தது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணையில், ஆதாரங்களை எடுத்துப் போட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு, துளைத்து எடுத்துள்ளனர் வருமானவரி அதிகாரிகள்.

அதனால், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி பல தகவல்களை ஒப்பித்துள்ளார் விஜயபாஸ்கர். அவர் கூறியதில் இருந்தும், ஏற்கனவே சேகர் ரெட்டியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 9 அமைச்சர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் வருமானவரி துறை அதிகாரிகள்.

அதனால், அந்த 9 அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், எப்போது வேண்டுமானாலும் ரைடுகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.