Asianet News TamilAsianet News Tamil

அடித்து நொறுக்கப்பட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார்...

கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கியிருக்கும் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அடிப்படை மீட்பு பணிகள் இன்னமும் துவங்காமல் இருப்பதால் பல இடங்களில் மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சுவரேறிக் குதித்து தப்பினார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டு பலத்த சேதத்துக்கு ஆளானது.

ministers car damaged
Author
Chennai, First Published Nov 18, 2018, 6:04 PM IST

கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கியிருக்கும் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அடிப்படை மீட்பு பணிகள் இன்னமும் துவங்காமல் இருப்பதால் பல இடங்களில் மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சுவரேறிக் குதித்து தப்பினார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டு பலத்த சேதத்துக்கு ஆளானது.ministers car damaged

பல ஊர்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்குக்கூட உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலையில் அரசு நிர்வாகம் மந்தமாக இருப்பதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் புயல்தாக்கியபோதும் சென்னையை புயல்தாக்கியப்போதும் கிடைத்த நிவாரணப்பணிகளில் பத்து சதவிகிதம் கூட தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறி மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் வேதாரண்யம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நடந்துகொண்டிருந்த சாலை மறியல் குறித்து அறியாமல் அப்பகுதிக்கு விசிட் அடித்திருந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அமைச்சரின் வருகையை அறிந்த மக்கள் அவர் இருக்கும் பகுதியை நோக்கி விரைந்தனர். மக்கள் தன்னை நோக்கி கோபமாக வருவதை அறிந்த அமைச்சர் சற்றும் யோசிக்காமல் காரை விட்டு இறங்கி சிலரின் உதவியுடன் ஒரு நெடிய சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடினார்.ministers car damaged

இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய அமைச்சர் அடுத்த சில மணி நேரங்களிலேயே போராட்டக்காரர்களிடம் சிக்கினார். முதலில் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து அவர் நழுவியவுடன் அவரது காரை அடித்து நொறுக்கினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios