பெண் செய்தியாளர்களிடம் அவ்வாறு பேசியது தவறுதான் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டார்.

2018 - 2019 ஆம் ஆண்டுக்கான படஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த கூட்டத்துக்குப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறத்தி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு வெளியே வந்த தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், பெண்
செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.

அதாவது கூட்டத்தில் எதைப்பற்றி விவாதிக்கப்பட்டது என்று கேட்டார். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரோ, பெண் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமடல், அவருக்கு கண்ணாடி அழகாக உள்ளது என்றும், அவர் அழகாக இருப்பதாகவும், அவரது தோற்றத்தைப் பற்றி கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சை, செய்தியாளர் மறுத்து பலமுறை கேள்வி கேட்ட போதும், அமைச்சர் விஜயபாஸ்கர், தொடர்ந்து சிரித்தபடியே பெண் செய்தியாளர் அழகாக
இருப்பதாக கூறிச் சென்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த செயல், அங்கிருந்த செய்தியாளர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. பத்திரிகையாளர் முன்னிலையில், அமைச்சர் ஒருவர் பெண்
பத்திரிகையாளரிடம் அநாகரிகமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் நேற்றைய சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

அனைத்து பத்திரிகை நிருபர்களையும் செகோதர சகோதரிகளாகவே நான் கருதுகிறேன்.  யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. செய்தியாளரின் அரசியல் வேள்விகளைத் தவிர்க்கவே முற்பட்டேன் என்று கூறினார்.  

செய்தியாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்ட வண்ணம் இருந்தனர். அதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து செல்வதிலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் குறியாக இருந்தார்.