சாதாரணமா சாரல் காத்து அடித்து, பாரம் தாங்காமல் பொதுஜனம் விழுந்தாலும் கூட அரசாங்கத்தைப் போட்டு பொளந்து கட்டுவார் வைகோ. இப்போதோ தேசமே அதிரும் வண்ணம் கஜா புயல் கொளுத்தி எடுத்திருக்கிறது. விடுவாரா புரட்சிப் புயல்? வெளுத்துக் கட்டிட மாட்டாரா என்ன? இதோ கட்டிட்டாரே!
சாதாரணமா சாரல் காத்து அடித்து, பாரம் தாங்காமல் பொதுஜனம் விழுந்தாலும் கூட அரசாங்கத்தைப் போட்டு பொளந்து கட்டுவார் வைகோ. இப்போதோ தேசமே அதிரும் வண்ணம் கஜா புயல் கொளுத்தி எடுத்திருக்கிறது. விடுவாரா புரட்சிப் புயல்? வெளுத்துக் கட்டிட மாட்டாரா என்ன? இதோ கட்டிட்டாரே!
கஜா புயல் விவகாரம் தொட்டுக் கருத்துக்களை கதறவிட்டிருக்கும் வைகோ ”அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிதான். ஆனால் புயலின் பின் வரும் நிவாரண நடவடிக்கைகள்தான் போதவே போதாது. ஆனால் 60 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ளது சேதம் என்பதையும் இங்கே குறிப்பிட மறக்கமாட்டேன் நான்.
அமைச்சர்கள் விஜயகுமார், உதயகுமார் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் முதல்வர் பழனிசாமி ஏன் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று, முகாம் அமைத்து இயங்கவில்லை, பாதிப்புகளை சீர் செய்யவில்லை? முதல்வர் தன் பணி, கடமையிலிருந்து தவறிவிட்டார். தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளுக்கு வராத மோடியை மிக கடுமையாக கண்டிக்கிறேன் நான்.
அந்த அநீதியை மட்டுமா பிரதமர் செய்துள்ளார்!, உயிர் பிழைப்பே சவாலென துடிக்கும் தமிழக மக்களுக்கு நிவாரணம் கேட்டு சென்ற முதல்வரை சந்திக்கவும் காலம் தாழ்த்தியுள்ளார்.
இதையெல்லாம் தட்டிக்கேட்க முதுகெழும்பு இல்லாத நபராகத்தானே தமிழக முதல்வர் இருக்கிறார். வரும் 25-ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் புயல் பாதித்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட உள்ளோம்.” என்று கூறியுள்ளார்.
கஜா புயல் கடந்த பகுதிகளில் மையம் கொள்ள இருக்கும் புரட்சிப் புயலால் ஆளுங்கட்சியின் அரசியல் வெளியில் என்னென்ன சேதாரங்கள் உருவாக இருக்கிறதோ!...
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 24, 2018, 4:56 PM IST