Asianet News TamilAsianet News Tamil

ஆ.ராசாவை வீழ்த்த பக்கா ஸ்கெட்ச் போட்ட அமைச்சர் வேலுமணி... நீலகிரியில் அதிரடி வியூகம்..!

நீலகிரி மக்களவை தொகுதியில், அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் பொறுப்பை, உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி வசம் ஒப்படைத்திருக்கிறது அதிமுக தலைமை. 
 

Minister Velumani the Pakka Sketch to defeat A.Raja
Author
Tamil Nadu, First Published Apr 16, 2019, 3:44 PM IST

நீலகிரி மக்களவை தொகுதியில், அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் பொறுப்பை, உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி வசம் ஒப்படைத்திருக்கிறது அதிமுக தலைமை. Minister Velumani the Pakka Sketch to defeat A.Raja

அந்த மாவட்ட, அதிமுகவில் எக்கச்சக்க கோஷ்டிப்பூசல். 2014ல் இந்தத் தொகுதியில் ஆ.ராசாவை தோற்கடித்த சி.கோபால கிருஷ்ணனுக்கு சீட் மறுக்கப்பட்டு, பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்பியான எம்.தியாகராஜனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கோஷ்டி பூசல் உச்சமடைந்துள்ளது. நட்சத்திர வேட்பாளரான ஆ.ராசாவை வீழ்த்தியே ஆக வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவே போட்டிருக்கிறது. Minister Velumani the Pakka Sketch to defeat A.Raja

34 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014-ம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. அதிலும், ஒரு லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஆகையால் இங்கு மீண்டும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என களமிறங்கி இருக்கிறார் அதிமுக வேட்பாளர் தியாகராஜன். திமுகவுக்கு பலத்த போட்டியாக அதிமுக இருப்பதால் கோஷ்டின் மோதல் மூலம் வெற்றியை இழந்து விடக்கூடாது என திட்டமிட்டுள்ளது அதிமுக. Minister Velumani the Pakka Sketch to defeat A.Raja

கோஷ்டி மோதலை தவிர்க்க வியூகம் வகுத்த அதிமுக அதனால், தேர்தல் பணிகளை, அடிமட்ட நிர்வாகியில் இருந்து, எம்.எல்.ஏ., வரைக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார் வேலுமணி. 'பூத் வாரியாக ஓட்டுகளை அள்ளிட்டு வரவேண்டும்' என உத்தரவிட்டு இருக்கிறார். அப்படி அதிகமான ஓட்டு வாங்கித் தரும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு அதிமுக வெற்றிபெற்றால் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில்  'சீட்' தரப்படும்' என உறுதி அளித்திருக்கிறாராம். அதனால் கோஷ்டி பூசலை மறந்து அனைவரும் தீயாக வேலையில் களமிறங்கி விட்டனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios