Asianet News TamilAsianet News Tamil

கொரோனா, பறவை காய்ச்சல் எது வந்தாலும் தமிழகம் சமாளிக்கும்..!! கெத்து காட்டும் கால்நடைத்துறை அமைச்சர்..!!

கொரோனா , பறவைக்காய்ச்சல் என எது வந்தாலும்  அதை  சமாளிக்கும் திறமை தமிழகத்திடம் உள்ளது  எனக் கூறியுள்ளார் . கொரோனா பற்றி தெரிவித்துள்ள அவர் தமிழகத்தில் இதுவரை எந்தவிதமான பிரச்சினையும் இல்லை ,  ஆகையால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை 

minister udumalai radhakrishnan says - corona bird flu will not affect tamilnadu, and tamilnadu also can handle  this virus's
Author
Chennai, First Published Mar 10, 2020, 12:48 PM IST

தமிழகத்தில் கொரோனா பறவைக்காய்ச்சல் என எது வந்தாலும் சமாளிக்கும் திறன் தமிழகத்திற்கு உள்ளது என உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் யாருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை ,  அதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது .  இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடங்கியுள்ளது .  கடந்தவாரம் 6ஆக்  உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 47 ஆக உயர்ந்துள்ளது .  இந்நிலையில் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார் .  வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பலர் கொரோனா தொற்றுடன்  வருவதால் இங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது . 

minister udumalai radhakrishnan says - corona bird flu will not affect tamilnadu, and tamilnadu also can handle  this virus's

தமிழ்நாடு ,  கேரளா,  மட்டுமல்லாது .  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .  பஞ்சாப் ,  டெல்லி ,  உத்தரப் பிரதேசம் ,  ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கோரானாவுக்கு ஆளாகியுள்ளனர் .  இவர்கள் அனைவரும் ஈரான் ,  அமெரிக்கா ,  உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் அவர் .  அதேபோல் தமிழகத்திலும்  கொரோனா  தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது .  ஓமனில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு கொரோனா  வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .  இந்நிலையில் அவர் பாதுகாப்புடன்  இருப்பதுடன் அவர் மெல்ல வைரஸ் காய்ச்சலில் இருந்து குணமாகி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .  ஆகவே தமிழக மக்கள் இந்த வைரசுக்கு அஞ்சத் தேவையில்லை எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ,

 minister udumalai radhakrishnan says - corona bird flu will not affect tamilnadu, and tamilnadu also can handle  this virus's

கொரோனா , பறவைக்காய்ச்சல் என எது வந்தாலும்  அதை  சமாளிக்கும் திறமை தமிழகத்திடம் உள்ளது  எனக் கூறியுள்ளார் . கொரோனா பற்றி தெரிவித்துள்ள அவர் தமிழகத்தில் இதுவரை எந்தவிதமான பிரச்சினையும் இல்லை ,  ஆகையால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை . அதேபோல் பறவைக்காய்ச்சல் பீதியையடுத்து   தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும்  தீவிர கண்காணிப்பில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார் .  இதற்கிடையே  தமிழகத்தில் கொரோனா  வைரஸின்  நிலவரம் குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,  தமிழகத்தில் 8 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வில் 7 பேருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது என டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் .  அதேபோல் தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை எனவும் கூறுகின்றனர் ஆனாலும் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios