தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளில் மூடப்படும் என அமைச்சர் தங்கமணி திடீரென அறிவித்துள்ளார் .  பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் அதிமுக கூறியிருந்த நிலையில் அமைச்சர் அவ்வாறு  கூறியுள்ளார்,  சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்  எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கமணி இவ்வாறு பதிலளித்தார் .   திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் எழுப்பிய  கேள்வியில்,   கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் படிப்படியாக மது பானக் கடைகள் மூடப்படும் என்று மக்களிடம் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தீர்கள் ஆனால் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது இன்னும் உள்ள ஒரு ஆண்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு  விடுமா என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தவிற 5 ஆண்டுகளில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று எங்கேயும் சொல்லவில்லை என்றார்,  தொடர்ந்து பேசிய அவர்  திடீரென மதுபான கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உள்ளே வந்துவிடும் என்றார் .  இடையே குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றபோது படிப்படியாக தான் எல்லாம் செய்யமுடியும் குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது கள்ளச்சாராயம் வந்து விடக்கூடாது என்பதால்தான் அரசு கவனமாக இருந்து அதைப் பின்பற்றி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்றார் .  இதனையடுத்து மேலும் ஒரு கேள்வி எழுப்பிய  ஆஸ்டின் கலைஞர் ஆட்சியில் தான் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது என்றார். 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி ,  ஜெயலலிதா ஆட்சியில்தான் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது என்றார் .  அதேபோல் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டத்திலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கிடைக்கவில்லை ,  சுமார் 4.25 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள் ,   டெல்டா பகுதிகள் பாதுகாப்பு சிறப்பு மண்டலமாக அறிவிக்க சட்டத்தில் பல குறைகள் உள்ளது  என்றார் .  அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  டெல்டா விவசாயிகளுக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு  பொருத்தப்பட்டுள்ளது சட்டத்தில் எந்த ஓட்டையும் இல்லை என்றார்  இப்படியாக நேற்று சட்டசபையில்  காரசார விவாதம் நடைபெற்றது .