தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து சமூக வளைதலங்களில் கேலி செய்து தகவல் பரப்பிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

 

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. காலியாக இருந்த 375 பொறியாளர்கள் பணியிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி வெளி மாநிலங்களில் இருந்து 36 பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 2 ஆண்டுகளுக்குள் தமிழ் கட்டாயம் கற்று கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் பணியை இழப்பார்கள். உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி பணியில் சேர்ந்துள்ளதால் இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட முடியாது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை தடுத்த முதல்வர் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி ஆகியோர் மீது ஓபிஎஸ் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில்  தான்  பணி நியமனத்தை கண்டித்து அமைச்சர் தங்கமணியை கேலி செய்து சமூக வலைதளத்தில் தகவல் பரப்பப்பட்டது. அமைச்சரை கேலி செய்த அதிமுக பிரமுகரான சுப்பிரமணியம் மற்றும் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  என்று கூறப்படுகிறது.