Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..!

இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

minister Sevvoor Ramachandran corona test positive...edappadi palanisamy shock
Author
Tamil Nadu, First Published Sep 9, 2020, 10:11 AM IST

இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வந்த நிலையில், தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

minister Sevvoor Ramachandran corona test positive...edappadi palanisamy shock

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலையில் ஆய்வு நடத்துகிறார். ஆகையால், ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

minister Sevvoor Ramachandran corona test positive...edappadi palanisamy shock

இதனையடுத்து, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், அமைச்சரின் தொடர்பில் இருந்த திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios