மதுபிரியர்களுக்கு முக்கிய செய்தி..!! அமைச்சரின் சொன்ன அதிரடி தகவல்..!!

மதுப்பிரியர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்றினை தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Minister Senthil Balaji press meet about tasmac announcement

கோவை ஆர்.எஸ் புரம் கலையரங்கத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தை துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழகத்தினுடைய முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றுக் நாட்களில் இருந்து, தொடர்ந்து தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றிக் கண்டிருக்கிறார். 

Minister Senthil Balaji press meet about tasmac announcement

குறிப்பாக ஆட்சி பொறுப்பேற்ற முதல் கையெழுத்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் நிவாரண நிதி வழங்க கூடிய சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு கையெழுத்திட்டு அனைத்து குடும்பங்களுக்கும் நான்காயிரத்தை வழங்கி இருக்கக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார்.

முதலமைச்சர் தளபதி அவர்களைப் பொருத்தவரை வாக்களித்தவர்கள் அறியாதவர்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் 234 தொகுதிகளையும் தன்னுடைய தொகுதியாக நினைத்து அனைத்து தொகுதிகளுக்கும் ஒருசேர வளர்ச்சித் திட்டங்களை வழங்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி வழங்கி வருகிறார்.

Minister Senthil Balaji press meet about tasmac announcement

சிறுவாணி அணை நீண்டகால திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நிதி ஆதாரம் பெறப்பட்டு, கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளை தொற்று குறையும் வரை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு முதல்வர் வரக்கூடிய காலத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பார். அதன்படி அரசு செயல்படும்’ என்று கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios