Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! மாணவர்கள் ஏக போக மகிழ்ச்சி..!

வரும் ஆண்டுகளில் நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்திற்கு தமிழக மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்து உள்ளார். 
 

minister senkottaiyan taken good decision anout neet exam
Author
Chennai, First Published Feb 19, 2019, 6:33 PM IST

வரும் ஆண்டுகளில் நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்திற்கு தமிழக மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்து உள்ளார். 

அதன் படி, இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 561 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. ஒரு மாணவர் கூட வெளி மாநிலம் சென்று தேர்வு எழுதும் நிலை வராது நெல்லையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் 

minister senkottaiyan taken good decision anout neet exam

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், இந்தியாவில் 80 லட்சம் பேருக்கு வேலை இல்லை, தமிழ்நாட்டில் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை. இந்த நிலை மாற பல்வேறு அதிரடி நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி இனி வரும் காலங்களில் 12 ஆம் வகுப்பு படித்தாலே போதும் வேலை பெரும் நிலை உருவாக்கி தர முடியும். அதற்கான பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு தொடங்க உள்ளது என தெரிவித்து உள்ளார் 

நீட் தேர்விற்கு 16 ஆயிரம் மாணவர்களுக்கு 41 பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் +2வில் முதன்மை மதிப்பு பெறும் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 10 கல்லூரிகளில் 20 நாட்களுக்கு முழு பயிற்சி அளிக்கப்படும்.

minister senkottaiyan taken good decision anout neet exam

இதே போன்று தமிழகத்தில் ஆடிட்டர் வேலை வேலைக்கான வாய்ப்பு  அதிகமாக உள்ளது. இதனால் +2வில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ விற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இதெல்லாம் தவிர்த்து, வரும் கல்வி ஆண்டு முதல் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணியை வழங்க மத்திய அரசை அணுகி இருக்கிறோம். நீட் தேர்வு கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 561 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 

ஒரு மாணவர் கூட வெளி மாநிலம் சென்று தேர்வு எழுதும் நிலை வராது என செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்து உள்ளார். அமைச்சர்  செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொண்டு வரும் பல அதிரடி முடிவுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவ மாணவிகளும் ஏக போக சந்தோஷத்தில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios