மக்களே... ஈரோடு பக்கம் சென்று வாருங்கள்....சாதாரண ரோடும், பைபாஸ் ரோடு மாதிரியே சும்மா மின்னும் பாருங்க....
மக்களே... ஈரோடு பக்கம் சென்று வாருங்கள்....சாதாரண ரோடும், பைபாஸ் ரோடு மாதிரியே சும்மா மின்னும் பாருங்க....
எங்கு பார்த்தாலும் அருமையான ரோடு... குண்டு குழி என்பது எல்லாம் அந்த ஏரியா பக்கம் பார்க்கவே முடியாது....அதுவும் ஈரோட்டில் இருந்து, பெருந்துறை வழியாக கோபிப்செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகள் அந்தியூர், பவானி,சத்தி, சிறுவலூர் என.... அப்பப்பா...என்ன அழகு ...! எத்தனை அழகு....கோடி மலர் கொட்டிய அழகு.....!
அது எப்படிங்க தமிழ்நாட்டிலுள்ள மற்ற மாவட்டங்கள் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு ஆனால் ஈரோடு மாவட்டம் மட்டும் பளபளக்குதே என பலரும் வாய் பேச கேட்க முடிகிறது. அதிலும் கோபிச்செட்டிபாளையம் என்றாலே.. என்ன ஒரு கொள்ளை அழகு....அருமையான சாலைகள்...... எங்கு பார்த்தாலும் செல்வ செழிப்பாக... அப்படியே கண்ணுல எடுத்து ஒத்திக்கலாம் போல உள்ளது.....

சரி வாங்க விஷயத்துக்கு போலாம்.....அட கோபிச்செட்டிபாளையம் யாரோட தொகுதி..? "EDUCATION STAR" செங்கோட்டையன் தொகுதி ஆச்சே... பின்னே மினுக்க தானே செய்யும்.......பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கல்வித்துறையில் மட்டும் தான் இப்படி ஒரு கலக்கு கலக்குகிறார் என்றால் சொந்த ஊரில், அவருடைய தொகுதியை சும்மா சூப்பரா வைத்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்று ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேருந்துநிலையத்தை மாற்ற முடிவு செய்து, அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள புதிய இடத்தை பார்வையிட்டார். உடன் பவானி தொகுதி எம்எல்ஏ வான கருப்பணன் இருந்தார்.

இவ்விரு அமைச்சர்களும் ஒன்றாக சென்று புதிய இடத்தை பார்வையிட்டனர். தற்போது உள்ள பேருந்து நிலையம் மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால், புதிய இடத்தை தேர்வு செய்து உள்ளனர் அமைச்சர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவும் பகலும் அமைச்சர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இன்றும் அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஜெயகுமார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் உதகுமார் ஆகியோர் கஜாவால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
