டிடிவி.தினகரன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்வது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக  இருந்த நாகராஜன் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வருவாய் அலுவலர் நிர்வாக பொறுப்புகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மாற்றம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் அனுபவமும், திறமையும் நிறைந்தவர் தேவை என்பதால் தான் மாவட்ட ஆட்சியர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சத்துணவு ஊழியர்கள் பணி நியமன விவகாரத்தில் தான் ஆட்சியர் மாற்றப்பட்டார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

 

அதிமுக ஆட்சியில் கடை நிலை ஊழியர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை சுதந்திரமாக செயல்படுகின்றனர். 7 தமிழர்களின் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளதாகவும், அது இந்திய மற்றும் சர்வதேச அரசியல் பின்னணியை கொண்டது என்றும் கூறினார். பிற மாநிலங்களில் தமிழை 3-ம் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு பிரதமருக்கு விடுத்த கோரிக்கையை தான் வழிமொழிவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் மக்கள் செல்வாக்கு வந்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் நினைத்து கொண்டாலும் தமிழக மக்கள் நினைக்கவில்லை. டிடிவி.தினகரன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்வது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.