எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் முன் ஜெயலலிதா 9 முறை யோசித்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரையில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் இசை நீருற்றை தொடங்கி வைத்தார். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வண்ண விளக்குகளுடன் கூடிய இந்த இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோருடன் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ, மு.க. ஸ்டாலினுடைய குடும்ப கட்சியாகவே மாறியுள்ளதாகவும், அழகிரியை போல கனிமொழியையும் ஒதுக்கிவைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்வர் எனவும், இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றார். 

எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா 9 முறை யோசித்தால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசித்து செயல்படுவார் என தெரிவித்த அவர், ஜெயலலிதாவுக்கு இருக்கிற மாஸ் தனித்துவமானது எனவும், அவருக்கு இணையான தலைவர் உலகத்தில் யாரும் இல்லை எனவும் குறிப்பிட்டார். மத்திய அரசு தமிழகத்தில் எந்தவொரு மொழியையும் திணிக்கவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.