தேவைப்படும் நிலை உருவானால் இருவரும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தயார் என ரஜினியும் கமலும் அறிவித்துள்ள நிலையில் அவர்களை அமைச்சர் செல்லூர் ராஜு மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.  நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி என்ற இடத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்துவைத்தார். 

அப்போது ரஜினி கமல் அரசியல்  நிலைப்பாடு குறித்து பேசி அவர்,  படத்தில் வேண்டுமானாலும்  ரஜினியும் கமலும்  ஹீரோக்களாக இருக்கலாம் ஆனால் நிஜத்தில் அதற்கு சாத்தியமில்லை.  இன்னும் இரண்டு படங்கள் தோல்வியடைந்தால் ரஜினி கமல் மட்டுமல்ல அவர்களை வைத்து படம் எடுத்தவர்கள்  நிலையும் மோசமாக்கிவிடும் இன்னும் கட்சியை ஆரம்பிக்காத நடிகர் ரஜினியின் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது அது கலைக்ஸன் கலை கட்ட வேண்டும் என்பதற்காக இப்படி அவர் பேசி வருகிறார் என்று கூறியவர் இருவருக்கும் வயதாகிவிட்டது, இந்த காலத்தில் ரஜினி  கமல் அரசியலில் இணைவது காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது என்பதற்கு உதாரணம்எனகூறிவிமர்சித்துள்ளார்.

 

அமைச்சரின் இந்த பேச்சு ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜ் இப்படிப் பேசியது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.