பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள நீங்கள் மசூதிக்கு வந்து வாக்கு சேகரிக்கக் கூடாது என மதுரையில் இஸ்லாமியர்கள் அமைச்சர் செல்லூர் ராஜுவையும், அவரது ஆதரவாளர்களையும் தடுத்து நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சியினர் தமிழகம் முழுவது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சமுதாயத்தினர், மதத்தினரிடமும் வாக்கு சேகரிக்க கோயில் மசூதி, தேவாலாயங்களில் மக்களை சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில் பாஜவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளதால் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மசூதிக்குள் நுழையக்கூடாது என ராமநாதபுரத்தில் திருப்பி அனுப்பபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மதுரையில் உள்ள ஒரு மசூதிக்கு தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிக்க சென்றார்."

அப்போது, அப்போது ’’பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு எப்படி நீங்கள் முஸ்லிம்களிடம் ஓட்டு கேட்கலாம். இது எங்கள் உணர்வு பூர்வமான விஷயம்’’ என உள்ளே செல்ல விடாமல் கூடிக்கொண்டு இஸ்லாமியர்கள் கோபத்துடன் தடுத்து அனுப்புகின்றனர். 
இதுபோல் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக கோவில்களில் அமைந்துள்ள வீதிகளில் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்றால் எந்த மாதிரியான தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும், இதற்கு பெயர் மதவாதம் இல்லையா? என சிலர் விவாதங்களை முன் வைத்து வருகின்றனர்.