பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைய வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்றார். 

2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்று சொன்ன பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

திருப்பூரில் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில்;- பாஜகவில் 18 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளோம். பாஜகவால் கண்டெடுக்கப்பட்டு, ஒவ்வொரு நிலையாக உயர்ந்து, இன்றைக்கு மத்திய அமைச்சராக எல்.முருகன் உள்ளார். நயினார் நாகேந்திரன் அதிமுகவை விட்டுவிட்டு, இன்றைக்கு பாஜகவில் சேர்ந்து பாஜகவில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக உள்ளார். பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைய வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்றார். 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு;- மக்கள் பலன் பெறும் வகையில் நலத்திட்டங்களை வழங்கவேண்டுமென கூறினார். அடுத்த அரை நூற்றாண்டுக்கு திமுக தலைவருக்கு தோள் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். பாஜக 2026 ஆட்சிக்கு வரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைசர் சேகர் பாபு? அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் வைக்கலாம் இது திராவிட மண் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். 

மழைக்காலத்திலும் தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார். தமிழக முதலமைச்சர் நாளை நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்பவர்கள் கூட பத்திரிக்கை செய்திகளுக்காக சில நாட்களுள் மட்டும் வந்துவிட்டு சென்றுவிட்டனர். தரைதட்டும் இடத்தில் படகு விடுகின்றனர். தமிழக முதல்வருக்கு பின் தமிழகத்தில் அதிக தூரம் பயணித்தவர் உதயநிதி ஸ்டாலின் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். 



அவர், நேரடியாக பதவிக்கு வரவில்லை திமுகவில் உழைப்பவரே உயர்வு பெறுவர் என கூறினார். கலைஞர் உணவகம் திட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு இன்னார் இனியவர்களுக்கு என்று பார்ப்பதில்லை ஏற்கனவே அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளனர். புதிய திட்டம் தான் கலைஞர் உணவக திட்டம், இருக்கின்ற திட்டத்தை எடுக்கும் திட்டம் இந்த ஆட்சியில் இல்லை எனவும் அதுபோன்ற காழ்ப்புணர்ச்சி கொன்ற முதல் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் இல்லை என்று அமைசர் சேகர்பாபு குறிப்பிட்டார்.