தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாஜி அதிரடியான கருத்துக்களை அதிரடியாக அள்ளி வீசக்கூடியவர். இதுவரைக்கும் அவர் அள்ளிவீசிய பொன்மொழிகள் இதோ..


கடந்த தேர்தலின்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் பேச்சு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இருந்ததும், மூத்த அமைச்சர்களை மதிக்காமல் அரசு மற்றும் அதிமுகவின் கொள்கைகள் குறித்து அடிக்கடி பேட்டி அளித்ததும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.இதுதொடர்பாக கட்சி மேலிடத்திற்கு தொடர்ந்து பல புகார்களும் சென்றதால் மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து கடந்த மார்ச் 22ம் தேதி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நீக்கப்பட்டார்.

"திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், கொலை செய்யப்பட்ட விதம் மதரீதியானதுதான். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்படவில்லை. அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. இப்படியே போனால், இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தால், அதற்கு திமுக போன்ற கட்சிகள் ஒத்துழைத்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு சாரர் தப்பு செய்தால் கண்டிப்பதும், ஒரு சாரர் தப்பு செய்தால் அதைக் கண்டும் காணாமல் இருப்பதும் திமுகவின் வாடிக்கையாக உள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில அரசியல் இயக்கங்கள் தொடர்ந்து இதைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது''.

சமூக விலகல் மட்டுமே நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும் உதவி என்ற அவர், தனிமை படுத்தப்பட்டவர்கள் எல்ல...
இந்துவாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி, தப்பு செய்தவரை கடுமையாக கண்டிக்கிற கட்சியாக எல்லாக் கட்சியும் இருக்கணும்.ராமபிரானை அவமானப்படுத்தணும். சீதாபிராட்டியை அவமானப்படுத்தணும்… இந்துக்கள் பொறுமை காத்துகிட்டிருக்கான். தூக்கிப் போட்டு மிதிச்சான்னா எவனாவது இந்துக் கடவுளை பேசுவானா? உனக்குப் பிடிச்சாக் கும்பிடு. பிடிக்காட்டி போய்கிட்டே இரு.’ என ஆரம்பித்து ‘சூப்பர் ஹெச்.ராஜா’வாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் தாங்களே பேசத் தயங்குகிற பல விஷயங்களை அமைச்சர் இப்படி அதிரடியாக பேசியதில் பாஜக.வினர் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அதேசமயம், திமுக தரப்பு இதை புகாராக கவர்னர் மாளிகைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் பெயரில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அந்தக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரடியாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளரை சந்தித்து சமர்ப்பித்திருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி மதப் பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசுவதால், அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஆளுநரிடம் புகார் மனு அளித்தனர். 

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில்,இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னதில் என்ன தவறு உள்ளது. முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர், ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும்.கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபடும் அரசின் மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.

அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்.
தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லையென கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டு கட்சிகளிலும் கூட்டணி இல்லையென்றால் அவர் வேறு நாட்டிற்குத்தான் செல்ல வேண்டும். ரஜினியுடன் கூட்டணி இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், ரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை.


தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் பேட்டைக் காரன் களத்தில் பேசும் காட்சி முக்கியமானது. பேட்டைக்காரரின் பேச்சைக் கேட்காமல் தனுஷ் தனியாக சேவலை சண்டைக்குவிடுவார். அப்போது கோபத்துடன் மைக்கைப் பிடித்து, அந்த சேவலுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பேட்டைக்காரன் சொல்வார். அதிமுகவிலும் அப்படியொரு காட்சி நடைபெற்றுள்ளது.இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.

 ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது மு.க.ஸ்டாலின் சொல்லுவதை கேட்க… அவரின் கோரிக்கையை ஏற்க". அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று பேசியது ஓபிஎஸ். இபிஎஸ் ஆகிய இருவருக்குள் மீண்டுமொரு தர்மயுத்தம் நடத்தும் அளவிற்கு அணுகுண்டை வீசியிருக்கிறார்.