கமலின் நாக்கை அறுக்க வேண்டும்..! ரொம்ப ஓவராதான் பேசுறாரு...! 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என ஆவேசமாக பேசி உள்ளார். 

செய்தியாளர் சந்திப்பின் போது, 

"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என தெரிவித்த கமல்ஹாசனின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும். சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இவர் நாடகம் ஆடுவது எல்லோரும் அறிந்ததே.. இந்துக்கள் அதிகமாக இருக்கக்கூடிய இடத்திலேயே ஒரு இந்துவை தீவிரவாதி என தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. தீவிரவாதம் என்றால் அது இந்து மதமும் கிடையாது.. இஸ்லாம் மதமும் கிடையாது..கிறிஸ்தவ மதமும் கிடையாது. தீவிரவாதத்தை தீவிரவாதம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ரொம்ப ஓவராக பேசுகிறார் கமல்..அவருடைய நாக்கில் சனி உள்ளது" என தெரிவித்து உள்ளார்

கமலுக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்புகளும் பாரதிய ஜனதா கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக பாஜக சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நடத்தை விதிகளை மீறிய கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.