மோடி தெம்ப்பா இருக்கார்.. "தைரியம் இருங்தா அங்க கேளு"...! பொளந்து கட்டும் ராஜேந்திர பாலாஜி .!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்றளவும் தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பெரும்பான்மையான மக்கள் இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தாலும் சிறுபான்மையினர் ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக டெல்லி பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் 144 தடை சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை நிரூபணம் செய்யும் விதமாக பாஜகவும் பல இடங்களில் ஆதரவாளர்களை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்து காட்டி வருகிறது. இப்படி ஒரு தருணத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த ஒரு பேட்டியில்,

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு தான். இங்கு கிறிஸ்தவர். இந்து. இஸ்லாமியர்கள் அனைவரும் சரிசமமாக தான் இருக்கிறார்கள். இங்கு.. இப்பொழுது கேள்வி எழுப்பும் திமுக மற்றும் காங்கிரஸ் ....பாகிஸ்தானில் ஒரு இந்து நபர் நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு நடமாட முடியுமா? முடியாது அல்லவா ? இந்த கேள்விகளை அங்கு சென்று கேட்கலாமே....

இங்கு அமர்ந்துகொண்டு பாகிஸ்தான் பிரதமர் பேசுவதுபோல் இங்கிருந்து பேசிக்கொண்டு உள்ளார்கள். அங்கு சென்று கேட்க முடியவில்லை. ஆனால் மதசார்பற்ற நாடான இந்தியாவில் இருந்துகொண்டு சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை பெறுவதற்காக ஒட்டுமொத்த பெரும்பான்மை மக்களையும் வாட்டி வதைக்க முற்படுகின்ற திமுகவும் காங்கிரசும். உலக நாடுகளுக்கு எதிரான கட்சி என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசிய ராஜேந்திரபாலாஜி, "மோடி" எங்கள் நண்பர்; சகோதரர்; பாஜக எங்கள் உறவு என தெரிவித்துக்கொண்டு பாஜக உடனான உறவு நீடிக்கும் என்றும் தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக 39 இடங்களைபெற்றாலும்அவர்கள் அனைவரும் டெல்லியில் சென்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பரோட்டா தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் என்னவாயிற்று? ஒன்றுமில்லை.... மோடி மிகவும் தெம்ப்பாக இருக்கிறார்.

சொல்லப்போனால் அவரை கண்டு தான் உலக நாடுகளே பயப்படுகிறது என அடித்துப் பேசுகிறார் ராஜேந்திர பாலாஜி. சமீபகாலங்களில் ராஜேந்திரபாலாஜி பாஜகவிற்கு ஆதரவாகவும் குறிப்பாக மோடிக்கு ஆதரவாக பேசி வரும் கருத்துக்களுக்கு மத்தியில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு. மீண்டும் இதுபோன்ற அதிரடி கருத்துகளை வெளிப்படையாகவே பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.