Asianet News TamilAsianet News Tamil

குடிமகன்களை பாதுகாக்கவே மதுவிலக்கை கொண்டுவரவில்லை... அமைச்சரின் அடடே கரிசனம்...!

குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான் உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

minister Rajendra Balaji speech
Author
Tamil Nadu, First Published Mar 20, 2019, 12:31 PM IST

குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான் உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுகவில் இருப்பவர்கள் எல்லாருமே லீடர்ஸ், ஆனால் அதிமுகவில் தான் கேடர்ஸ் உள்ளனர். மக்களவை தேர்தலில் சுயேட்சைப்போல் அமமுக களத்தில் உள்ளதாக தெரிவித்தார். அதிமுகவும் திமுகவும் தான் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த தேர்தல் முதல்வரின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் தேர்தலாகும். minister Rajendra Balaji speech

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கான்ஃபரன்ஸ் ஹாலில் மீட்டிங், நேர்காணல் நடத்தி, அதிலேயே தேர்தலும் நடத்துவார் போல என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல் செய்தார். அதிமுகவில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் இடையே எந்தவித மோதலும் இல்லை என விளக்கமளித்துள்ளார். minister Rajendra Balaji speech

மேலும் மது குடிப்பவர்கள் உடனே குடிப்பதை நிறுத்தினால், நரம்புத்தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான், நாங்கள் உடனடியாக முழு மதுவிலக்கையும் கொண்டுவராமல் இருக்கிறோம். படிப்படியாக, மதுவிலக்கைக் கொண்டு வருகிறோம். ராஜகண்ணப்பன் விலகி சென்றதால் அதிமுக ஒரு ஓட்டு தான் இழப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios